பக்கம்:ரமண மகரிஷி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. பிறந்த சிசுதான் அழும்!
பாட்டி ஏன் அழுதாள்?

பாண்டிய நாட்டில் உள்ள சிவன் கோயில்களில் ஒன்று திருச்சுழி திருத்தலம். இந்தக் கிராமம் வளம் சூழ்ந்த ஒரு சிற்றூர். கௌண்டிய முனிவர் என்பவர் அவ்வூர் ஆற்றங்கரையில் அமர்ந்து தவம் செய்ததாக ஐதீகம். அதனால் அந்த நதிக்கு கௌண்டின்ய ஆறு என்ற பெயர் வந்தது. அந்தக் கிராமத்தில் அந்த ஆறு பாய்ந்து வளமுண்டாக்குவதால் மிகப் பசுமையான, அழகான கிராமமாக அது அமைந்திருந்தது.

திருச்சுழி எனும் அந்தத் திருத்தலத்தில் எழுந்தருளிய சிவபெருமானுக்குப் பூமிநாதர் என்று பெயர். மாணிக்கவாசகர் சுவாமிகள் அந்தப் பூமிநாத பெருமானைப் பாடி மகிழ்ந்துள்ள தலம் அது. இந்த ஊரில், சுந்தரம் அய்யரும், அவரது மனைவியார் அழகம்மாளும் இல்லற இன்பம் கண்டு வாழ்ந்து வந்தார்கள்.

சுந்தரம் அய்யர் மிகவும் ஏழை. ஏழை என்றால் சொல்ல வேண்டுமா என்ன? தரித்திரம் தானே அவர்களது குடும்பச் சொத்து? அதுவும், மாதம் இரண்டே இரண்டு ரூபாய்தான் அவரது குமாஸ்தா வேலைக்குரிய சம்பளம் என்றால், எப்படி இருக்கும் அய்யர் குடும்பம்?

சுந்தரயமய்யர், தனது ஊதியம் இரண்டுரூபாய் தானே என்று மனமுடைந்து விட்டவர் அல்லர். ‘முயற்சி மெய்வருத்தக் கூலி தரும்’ என்பதற்கு ஏற்றவாறு, தனது சிந்தனை சக்தியால் மக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/11&oldid=1280075" இலிருந்து மீள்விக்கப்பட்டது