பக்கம்:ரமண மகரிஷி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

ரமண மகரிஷி


“அந்த மனோ பலமற்றவர்கள் மூச்சுக் காற்றையே கண்காணியுங்கள். போகப் போக அந்தக் காற்றே மனத்தைக் கட்டுப் படுத்தி விடும்” என்ற ஆன்ம தத்துவத்தைத் திருவண்ணாமலை குகையிலே இருந்து கொண்டுதான் உலக மக்களுக்குப் போதித்தார்.

அத்தகையதோர் ஆன்ம மனோ பல ஞானி, எவ்வாறெல்லாம் தவநிலையில், யோக நிலையில், சிந்தனை நிலையில், உடலை உருக்கிய பசியெனும் அக்னி நிலையில், அருள் ஞான ஜோதி நிலையில் பல துயரங்களைப் பட்டுப் பட்டு, படிப்படியாக வெற்றி கண்டு, நமக்கும், நமது ஆன்மீகத் துறைக்கும் அரும்புகழ் சேர்த்த அருளாளரானார் என்பதை, அடுத்து வரும் அத்தியாயங்களிலே படிப்போம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/10&oldid=1280041" இலிருந்து மீள்விக்கப்பட்டது