பக்கம்:ரமண மகரிஷி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

ரமண மகரிஷி


சேவார்த்திகளுடைய கால்கள் புண்ணாகி விடக் கூடாதே என்ற இரக்க உணர்வோடு வழியிலே முளைத்துக் கிடந்த முட்களையும், கற்களையும் அப்புறப்படுத்திக் கொண்டிருப்பதாக, வந்த அந்தத் தகவல் கூறிற்று.

அந்த முட்களையும் கற்களையும் அகற்றிய பக்தாபிமானியின் பெயர் சிவானந்த யோகி. அவருக்குப் பின்னாளில் பல பத்தியாளர்கள் மாணவர்களாக மாறினார்கள். யோகியின் புகழ் பிறகு வளர்ந்தோங்கிப் பெருமை பெற்றது.

இந்தச் சந்நியாசியின் சாப நிலைக் கேற்ப சுந்தரமய்யர் கண்முன்னாலேயே அவருடைய உறவினர்கள் இருவர் பிச்சைக்காரனாக மாறினார்கள். இப்போது சுந்தரமய்யர் பிள்ளைகளிலே யார் துறவி ஆவார்களோ என்ற பேச்சு ஊர் முழுவதும் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருந்தது. கிராம மக்கள் அவ்வளவு மன வருத்தப் பரிதாபத்துடன் அய்யர் குடும்பத்தைக் கவனிக்கலானார்கள்.

சுந்தரமய்யர் துறவு கொள்ளமாட்டார். அந்த அவசியமும் அவருக்கு இல்லை, ஆனால், அவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் இருக்கிறார்களே என்று விளையாட்டாகப் பேசிக் கொள்வார்கள் ஊராருள் சிலர். அந்த மூன்று பேர்களிடம் அந்த அறிகுறிகளே இல்லையென்று அடித்துப் பேசினார்கள் மற்றும் சிலர்.

சுந்தரமய்யருடைய மூத்த மகன் நாகசாமி கல்வியில் கெட்டிக்காரனாக இருந்தான். இரண்டாம் மகன் வெங்கட்ராமனும் எல்லாவகையிலும் ஒழுங்கானவனாக இருந்தான். அதுவும், வம்படி, வழக்கும் குறும்புத் தனமும் கொண்டவனாக இருந்தானே ஒழிய, சந்நியாசியாக ஆகுமளவுக்கு அவனுக்கு அறிவுமில்லை; குடும்ப நிலையுமில்லை. சிறிய பையனும், வெங்கட்ராமனும் வீட்டிலிருந்த படியே கல்வி கற்று வந்தார்கள்.

இந்தக் குடும்பச் சூழ்நிலையில் வழக்கறிஞராகப் புகழ் பெற்றிருந்த சுந்தரமய்யர் 1895-ஆம் ஆண்டில் எதிர்பாராமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/20&oldid=1280090" இலிருந்து மீள்விக்கப்பட்டது