பக்கம்:ரமண மகரிஷி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

ரமண மகரிஷி




திருச்சி சந்திப்பில் வந்து நின்றது வெங்கட்ராமன் ஏறி வந்த ரயில். அப்போது முஸ்லிம் மதத்தைச் சார்ந்த ஒரு மதகுரு அங்கு வந்து அமர்ந்தார். அவருடன் வந்த சில இஸ்லாமியர்களுடனும், இந்து மத நண்பர்களுடனும், மகான்களது வரலாற்றைப் பற்றி அந்த மதகுரு எனப்படும் மௌல்வி ஆழமாகப் பேசிவந்தார்.

முஸ்லிம் மௌல்வி பேசுவதை அந்தப் பெட்டியிலே உள்ள சிலர் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மதகுருவும் மிக சுவராஸ்யமாய் பேசிக் கொண்டே வந்தார். எல்லாரும் அவர் உரையாடலை ஆமோதிப்பதைப் போலத் தலையாட்டியபடியே இருந்தார்கள். ஆனால், அதே பெட்டியில், எதிர் வரிசைப் பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஒரு சிறுவன் மட்டும் மௌல்விப் பேச்சைக் கேட்டும் கேளாததுமான நிலையிலிருப்பதை அவர் கண்டார்.

“தம்பி! எங்கேயப்பா போகிறாய்? என்றார் மௌல்வி!

நானா! திருவண்ணாமலை நகருக்குப் போகிறேன் என்றான் சிறுவன்.

திருவண்னாமலையா! நானும் அந்த ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள ரயில் நிலையத்தில் தானே இறங்கப் போகிறேன். என்றார் முஸ்லிம் மதகுரு!

“என்ன ஊரிலய்யா நீங்கள் இறங்கப் போகிறீர்கள்?” என்றதற்கு, திருக்கோயிலூரில் என்றார் முஸ்லீம்!

‘திருக்கோயிலூரா!’ அப்படியானால் இந்த ரயில் திருவண்ணாமலை நகருக்குப் போகிறதாய்யா? என்று மௌல்வியைக் கேட்டார் அவர்! திருவண்ணாமலைக்கு ரயில் போகாது, எந்த ஊருக்கு நீ பெற்றாய் பயணச்சீட்டு?’ என்றார் மத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/34&oldid=1280308" இலிருந்து மீள்விக்கப்பட்டது