பக்கம்:ரமண மகரிஷி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

35


அதிகமாகவே உண்டு பசியாறினான். பிறகு. தனது கையிலிருந்த சில்லறைப் பணத்தை ஓட்டல் காரரிடம் அவன் கொடுத்தபோது,

ஓட்டல் காரர் பையனைப் பார்த்து ‘எவ்வளவு காசு வைத்திருக்கிறாய் தம்பி?’ என்று கேட்டார். ‘ஐயா, இரண்டரை யணாதான் இருக்கிறது என்றான் பையன்.

உடனே ஓட்டல்காரர் பையன் மீதுள்ள அன்பால், ‘தம்பி, உன் காசு எனக்கு வேண்டாம். நீயே வைத்துக் கொள்’ என்று கனிவுடன் கூறியதைக் கண்ட சிறுவன், ஓட்டல் காரர் உள்ளத்தின் அழகை அவரது முகக் கண்ணாடியால் கண்டு ஒரு வித மன நெகிழ்வடைந்தான். பிறகு அவருக்கு வணக்கம் கூறிய வெங்கட்ராமன் விர்ரென்று ரயில்வே நிலையத்திற்குள் வந்து சேர்ந்தான்.

ஓட்டல்காரர் வேண்டாம் என்று கூறிய அந்த இரண்டரை அணாவுக்கு மாம்பழப்பட்டு எனும் ரயில் நிலையம் வரை பயண அட்டையைப் பெற்றான். அந்த ரயிலடி வந்ததும் இறங்கி மிக வேகமாக திருவண்ணாமலை ஊரை நோக்கி நடந்து கொண்டே இருந்தான்.

அந்த வேகத்தோடும், ஓட்டலில் உண்ட சோற்றின் தெம்போடும் சுமார் பத்துமைல் தூரம் வரை அங்கிருந்து நடந்து அரகண்ட நல்லூர் என்ற ஊரையடைந்தான் வெங்கட்ராமன். அப்போது ஆளே அசந்து போய் ஒரு கோயில் ஓரம் உட்கார்ந்து விட்டான். அவனையுமறியாத களைப்போடு!

அந்தக் கிராமத்தில் உள்ள அந்தக் கோவில் ஒரு சிறு மலைக் குன்று மீது கட்டப்பட்டுள்ளதாகும். அக்கோயிலின் சுவாமி பெயர் ஒப்பிலிநாதர் எனப்படும். அந்தக் கோயிலுள்ள குன்றின்மீது ஏறிப் பார்த்தால் திருவண்ணாமலையிலுள்ள அருணாசலேஸ்வரர் திருக்கோயில் தெரியும். அந்தக் கோயிலின் ஒரு மூலையில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/37&oldid=1280526" இலிருந்து மீள்விக்கப்பட்டது