பக்கம்:ரமண மகரிஷி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

ரமண மகரிஷி



வெங்கட்ராமன் அச்சமும், கூச்சமும் உடையவன்! அவன் வீட்டார் பிறருக்குக் கொடுத்து வழங்கியவர்களே தவிர எவரிடமும் பசி என்று புசிக்க அன்னம் கேட்டவர்கள் அல்லர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன்தானே இவனும்! யாரிடமும் எதையும் கேட்டு அவனுக்குப் பழக்கமுமில்லை அதனால், திருவண்ணாமலைக்குப் போக வழிகளைக் கேட்டுக் கொண்டிருந்தான், அவன்.

களைத்தது உடல்; எரிகிறது வயிறு. சோர்ந்தன கால்கள்; நடக்க முடியாமல், உட்கார்ந்து விட்டான் வெங்கட்ராமன்! சுற்றும் முற்றும் பார்த்த போது, எதிரே ஒரு உணவு விடுதி தெரிந்தது! உள்ளே சென்றான்; உணவு வேண்டும். பசிக்கிறது என்று கேட்டான் அவன்!

சிறு பையன் முகமெலாம் வியர்த்து விட்டதைக் கண்ட உணவு விடுதிக்காரர், தம்பி சோறு வேண்டுமானால் கொஞ்சம் நேரம் உட்காரு, இப்போதுதான் சோறு வேகின்றது. அதுவரை கொஞ்சம் நேரம் களைப்பாறு, அதற்குள் உணவு தயாராகி விடும் என்றார்.

உட்கார்ந்து விட்டான் வெங்கட்ராமன்; என்ன செய்வான் பாவம், பசியோ பசி! ஆனாலும் அவன் அப்போதும் பசியை மறந்து ஆழ்ந்து விட்டான் தியானத்தில்! ஆனால், ஓட்டல்காரர் பையனிருக்கிறானா? என்பதை அடிக்கடி எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

தியானத்தில் இருப்பவனைப் போலக் கால்களை மடக்கி சம்மணம் போட்டு நிமிர்ந்து உட்கார்ந்து, கண்களை மூடிக் கொண்டிருப்பதைக் கண்டதும் ஓட்டல்காரர், ஓஹோ பசி தியானமோ என்று பையனைப் பரிகாசம் செய்து கொண்டே அவனைத் தட்டி எழுப்பி உணவுண்ண அழைத்தார்.

ஓட்டல்காரர் போட்ட சாட்பாட்டை வெங்கட்ராமன் உண்டான். தனது லீட்டுச் சாப்பாடு போல இருந்ததாலும், சில வேளைகள் கிடந்த பட்டினியாலும், சிறுவன் ஓட்டல்காரரைக் கேட்டுச் சற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/36&oldid=1280517" இலிருந்து மீள்விக்கப்பட்டது