பக்கம்:ரமண மகரிஷி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8. பாலயோகி

துரையை விட்டு மாணவனாகப் புறப்பட்ட வெங்கட்ராமன் எனும் பதினைந்து வயதுடைய சிறுவனின் திருவருள் தியான நிலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் பக்தர்கள் இடையே முதலில் பிராமண சுவாமி என்ற விதையாக விதைக்கப்பட்டது. பிறகு அது, சின்ன சாமியானது. இப்போது குன்றக்குடி மடத்தினால் குருமூர்த்திசாமி என்ற புகழைப் பெற்றது. அது நாளுக்கு நாள் மக்கள் இடையே வளர்பிறையாக வளர்ந்து பெரும் புகழை ஈட்டிக் கொண்டிருந்தது.

குன்றக்குடி மடத்தைச் சார்ந்தவர் அண்ணாமலைத் தம்பிரான் என்பவர். அவர்தான் அப்போதைய குன்றக்குடி மடாதிபதியாகத் திகழ்ந்து வந்தார். அவர் கீழாநத்தூர் பூந்தோட்டம் ஒன்றில் தங்கி தம்முடைய இறை வழிபாடுகளை நடத்தி வந்தார். இதற்கு என்ன காரணம் தெரியுமா?

குன்றக்குடி மடம் துவக்கக் காலத்தில் திருவண்ணாமலை அருணாசலத்தில் இருந்தது. பிறகு தான் அது குன்றக்குடி எனும் பேரூர் ஒன்றுக்கு மாற்றப்பட்டது. அதனால், அண்ணாமலைத் தம்பிரான் எனப்படும் குன்றக்குடி மடாதிபதி குன்றக்குடியை விட்டு அருணாசலத்திற்கு வருவார். வந்தால் அந்தப் பூந்தோட்ட மாளிகையில்தான் தங்குவது வழக்கமாகும்.

அதுபோலவே, இம்முறையும் குன்றக்குடி மடாதிபதி திருவண்ணாமலையில் தங்கி இருந்தார். எப்போதும் போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/53&oldid=1280738" இலிருந்து மீள்விக்கப்பட்டது