(எ) ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். வேண்டுமவை தானே செய்து கொள்ளிலன்றோ தேவர்க்கு நித்யஸ் தநந்தயமானவடியேனும் ஸ்வகார்யத்துக்கு சமனாய் செய்து கொள் வதென்கிறார். அன்னை குடிநீரருந்தி முலையுண்குழவி தன்னுடைய நோயைத் தவிராளோ- என்னே! எனக்காவெதிராசா வெல்லா நீ செய்தால் உனக்கது தாழ்வோவுரை . அன்னை = ப்ரஜையினிடத்திலே அத்யந்த வாத்ஸல்ய யுக்தையான மய தாவானவள், குடிநீரருந்தி = ப்ரஜைக்கு ஏதேனுமொரு பிணியுணடானால், இது நம் குறையாலே வந்ததென்று தான்) த ற தீர்த்த முதலான வற்றை ஒளஷதத்துக்கு விரோதியாமல் பருகி, முலையுண குழவி தன்னுடைய = ஸ்வ போஷ்யமா யிருககிற ஸ்தநந்தயப்ரஜை யினுடைய, நோயை = வ்யாதி யை, தவிராளோ = போக்காளோ? என்னே! = இதென்ன ஆச்சர்யம் ! எனக்கா = அடியேனுக்காக, (மாத்ருவத் வத்ஸலரான தேவருக்கு நித்ய ஸ்த நந்தயனாயிருக்கிற வடியேனுக்காக) எதிராசா = எதிபதியே! எல்லா நீசெயதால் = அடியேனால் அநுஷ்டேயாம்ஸமா யிருப்பனவைகளெல்லாத் தையும் நீரநுஷ்டித்து ரக்ஷித்தால், உனக்கது தாழ்வோ = தேவருக்கது அவத்யமாமோ? (தேஜஸ்கரமா யிருப்ப தொன்றன்றோ ?) உரை = பகர். (இவ்வர்த்தத்தை அஜ்ஞனான வென்னைககொண்டு பேசுவிக்க வேணுமோ ? ஸர்வஜ்ஞரான தேவரீர தாமே அருளிச்செய்யலாகாதோ ?என்கிறார். (வ்யா - ம்) அதாவது ப்ரஜையினிடத்திலே அத்யந்த வாத்ஸல்ய யுக்தையான மாதாவானவள் ஒளஷத ஸேவைக்கும் சமமன்றிக்கே அத்யந்தம் uைoU0வயுக்தமாய் ஸ்வபோஷ்யமாயிருக்கிற ஸ்தநந்தய ப்ரஜைக்கும் ஏதேனுமொரு வனுக்கம் உண்டானால், இது நம் குறை யாலே வந்ததென்று தான்குடி நீர் முதலான ஒளஷத்ஸேவையைப் பண்ணி அதினுடைய வனுக்கத்தைத் தவிர்க்குமே. அப்படியே மாத்ருவத்வத்ஸலரான தேவர்க்கு நித்யஸ்தநந்தயமாயிருக்கிறவடி. யேனுக்காக யதிகளுக்கு நாதரானவரே! அடியேனால் அநுஷ்டே யாம்பபமாயிருப்பனவைகளெல்லாத்தையு மநுஷ்டித்து ரக்ஷித்தால் தேவர்க்கு அவத்யமன்றே! தேஜஸ்கரமாயிருப்பதொன்றன்றோ? இவ்வர்த்தத்தை, அஜ்ஞனானவென்னைக்கொண்டு பேசுவிக்க வேணும் மோ? ஸர்வஜ்ஞரானதேவர் தாமருளிச் செய்யலாகாதோ? இதென்ன வாஸ்சர்யம்! அருந்துதல் = உண்டல்.
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/17
Appearance