பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்வத்ரய வ்யாக்யாநம் 18 (சு) தேஹாதிகள் என்னுடைய தேஹாதிகள் என்று, ஆத் மாவில் வேறுபட்டுத்தோற்றுகையாலும், 'இதம்' என்று தோற்றுகையாலும், ஆத்மா "நான்" என்று தோற்றுகை யாலும், இவை யொருகால் தோற்றி யொருகால் தோற்றாமையாலும், ஆத்மா எப்போதும் தோற்றுகை யாலும், இவை பலவாகையாலும், ஆத்மா ஒருவனா கையாலும், ஆத்மா - இவற்றில் விலக்ஷண னென்று கொள்ளவேணும். (வ் ம்.) (தேஹாதிகள்) என்று தொடங்கி. தேஹாதிகள் என்னுடைய தேஹாதிகள் என்று - ஆக்மாவில் வேறுபட்டுத் தோற்றுகையாலும், 'இதம் என்று தோற்றுகையாலும், ஆத்மா "நான்" என்று தோற்றுகையாலும் ' அதாவது தேஹாதிகளானவை என்னுடைய தேஹம், என்னுடைய விந்தரியம், என்னுடைய மா ஸ்ஸ, என்னுடைய ப்ராணன், என்னுடைய புத்தி யென்று, மமகா புத்திக்கும், மமதாவ்யவஹாரத்துக்கும் விஷயமாய்க் கொண்டு அஹ மர்த்தபூதனான வாத்மாவுக்கு அந்யமாய்த்தொற்றுகையாலும், அப் படியே இது தேஹம், இது இந்திரியம் என்று இரும்புத்தி வ்யவ ஹாரவிஷபமாய்க் கொண்டு அஹமர்த்த வ்யதிரிக்தமாய்த் தோற்று கையாலும்; அங்ஙனன்றிக்கே, ஆத்மா அஹமர்த்தபூதனாய்க்கொண்டு தோற்றுகையாலு மென்றபடி. (இவை ஒருகால் தோற்றி ஒருகால் தோற்றாமையாலும் ஆத்மா எப்போதும் தோற்றுகையாலும்" 'இவை' என்று தேஹேந்த்ரியாதிகளைப் பராமர்பிக்கிறது. தேஹம் ஒருகால் தோற்றி ஒருகால் தோற்றாமையாவது -ஜாக்ரத்தமையில் (ஙச ) try மொஹா, கரமொ ஹாஇத்யாதிகளாலே அஹம் புத்தி வ்யவஹாரவிஷயமாய்க் கொண்டு ஆக்மத்வேந தோற்றியிருந்ததே யாகிலும், ஸுஷுப்திதஹையில் அப்படி தோற்றாதிருக்கை. ஆத்மா எப்போதும் தோற்றகையாவது - 'உறங்குவதுக்கு முன்பு இவையெல்லாம் அறிந்திருந்த நான் உறங்குகிறபோது என் னுடம்பு முட்படவறிந்திலேன் என்று, ப்ரத்யபிஜ்ஞை பண்ணு கையாலே. உபயாவஸ்த்தையிலும் தேஹாதந்யனா யிருப்பானொரு ஆத்மா உண்டென்று தோற்றுகை.