பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ராகுல் சாங்கிருத்யாயன்

சாந்தி-ரக்கதிதாவின் உடல் அங்கு பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனல் இக் கோயில்-ஆசிரமம் இடிந்து சிதைந்திருந்தது. பதினுென்ரும் நூற்ருண்டில் இந்தியப் பண்டிதர்கள் வாழ்ந்து சம்ஸ்கிருத நூல்களை திபெத்தில் மொழிபெயர்த்த இடமான கே-கார்-லிங் (இந்தியப் பணி நிலம்) உருக்குலைந்து காணப்பட்டது. இந்த இடத்தில் பெரிய நூலகம் ஒன்று முன்பு இருந்தது. விக்கிரம சீலாவில் கூடக் கிடைக்காத மிக அரிய நூல்கள் அங்கு இருந்தன என்று தீபாங்கர் பூரீஞ்னன் குறிப்பிட்டிருந்தார். ஆனல் இந்த நூல் நிலையம் நெடுநாள்களுக்கு முன்பே தீயில் அழிந்துபோயிற்று. சம்ஸ்கிருத நூல் ஒன்றுகூட ராகுலுக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் ஒரு சில திபெத்தியக் கையெழுத்துப் பிரதிகளையும் ஒவியங்களேயும் அவர் விலைக்கு வாங்கினர். அவர் சேகரித்த பொருள்கள் அனைத்தும் பதினெட்டு மட்டக் குதிரைகள்மீது ஏற்றப்பட்டு, காலிம்பாங் கொண்டுவரப்பட்டன. திரும்புகிற வழியில், ஷாலு விகார், டாஷா லம்போ, நார்தாங், நியான்ச்சி ஆகிய இடங்களில் சில புத்தகங்கள் அவருக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டன; மற்றும் சிலவற்றை அவர் விலை கொடுத்து வாங்கினர். கஞ்சூர், தஞ்சூர் தவிர, அவர் 1619 திபெத்திய கையெழுத்துப் பிரதிகள் கொண்டு வந்தார். லாஷாவிலிருந்து காலிம்பாங் திரும்புவதற்கு அவருக்கு, 1930 ஏப்ரல் 24 முதல் ஜூன் 3 முடிய, 39 நாட்கள் ஆயின. இப் புத்தகங்கள், எழுத்துப் பிரதிகள் எல்லாம் பாட்ன மியூசியத்துக்கு அன்பளிப்பாக வழங்கப் பட்டன; அவை காசிபிரசாத் ஜெயஸ்வால் பகுதியில் பாதுகாக்கப் படுகின்றன.

இந்த திபெத்திய திரிபீடகங்களின் தந்திர மற்றும் சூத்திர கிரந்தங்களின் பட்டியல் ஜப்பானில் மட்டுமே, அதுவும் 1936-ல் தான் பிரசுரம் பெறுவது சாத்தியமாயிற்று. இதிலிருந்து, ராகுல் கஞ்சூர் மற்றும் தஞ்சூர் தொகுப்புகளே சேகரம் செய்த பணியின் முன்னேட்டத் தன்மையைத் தெரிந்துகொள்ளலாம். அவைபற்றி வேறு மொழிகளில் எதுவும் தெரியவில்லை. இப்படைப்பின் அபூர்வமான லாஷா பதிப்பை ராகுல் கொண்டு வந்தார். மதம், தத்துவம், வரலாறு, வாழ்க்கை வரலாறு, கலே, வானநூல், மருத்துவம், புவியியல் சம்பந்தமான அநேகம் திபெத்திய நூல் களையும் அவர் கொண்டு வந்தார். தத்துவ நூல்கள் பெரும் பாலானவை, பெளத்த சமயத்தின் இரு பெரும் தர்க்க ஞானி களான நாகார்ஜுனரின் மாத்யாமிகப் பிரிவையும், அசங்காவின் யோகச்சாராப் பிரிவையும் சேர்ந்தவையாகும். தாந்திரீக திபெத்திய நூல்கள் ஏழாம் நூற்ருண்டு முதல் பத்தாம் நூற்ருண்டு வரையிலான காலத்தில் எழுதப்பட்டவை. பத்மசம்பவா, புசிதான், தாராநாத் ஆகியோர் எழுதிய கிரியா, தந்திரா சார்யா