பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爱势 ராகுல் சாங்கிருத்யாயன்

வரலாற்றின் முன்னுரையில் ராகுல் 1956-ல் இப்படி எழுதியிருக் இருர்: மா ஆசியாவுக்கு, ஆசியாவில் சைனவுக்கு, சொந்தமான வர். சைணு பன்னெடுங்காலமாக இந்தியாவோடு கலாசாரப் பிணைப்புகளும் உறவுகளும் கொண்டிருக்கிறது. மார்க்சிசத்தை செயல்படுத்துவதில் ஒவ்வொரு நாட்டிலும், அதன் மேதமைக்கும் நிலமைகளுக்கும் ஏற்றபடி, முறைகள் வித்தியாசப்படும். அது சிரமமான பணிதான். ஆலுைம், அதை இப்படிச் சொல்லலாமே: ஒரு நாட்டில் மார்க்சிசத்தை செயல்படுத்துவதற்கு மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மா போன்ற மேதைகள் தேவைப்படுகிமூர்கள். ஒவ்வொரு நாட்டிலும் புரட்சிக்கான சக்தி களும், புதிய நிர்மாணத்தின் சக்திகளும் நிலை பெற்றுள்ளன; சில. சமயங்களில் சந்தர்ப்பங்களும் முற்றிக் கனிந்திருக்கின்றன. ஆளுல் శ్రీ வெற்றிகரமான புரட்சிக்குத் தலைமைதாங்கி நடத்தக்கூடிய பெரிய மனிதர்கள் இல்லாமல் போகிருர்கள். அவசியம் ஏற்படு மால்ை அப்படிப்பட்ட ஒரு மேதை வருங்காலத்தில் நிச்சயம் பிறப்பான். நம் தாட்டிற்கு மாவின் வாழ்க்கை அநேக பாடங்களைக் கற்பிக்கிறது. இந்த மேற்கோளிலிருந்து, ராகுல் வெளிப் படையான மார்க்சிஸ்ட் என்பதும், புகழவோ எவரிடமிருந்தும் லாபம் பெறுவதற்காகவோ ஒருபோதும் அவர் எதையும் எழுதிய தில்லை என்பதும் தெளிவாகப் புலளுகிறது. உண்மையில், ராகுல் தனது சோஷலிச தத்துவத்தை புத்தகங்களிலிருந்து கற்ருளில்லை; வாழ்க்கையிலிருந்தே கற்றுக்கொண்டார். அவர் சாய்வு நாற்காலிக் கொள்கைவாதியோ, வரவேற்பு அறைப் பண்டிதரோ அல்லர். . -

அவரது படைப்பு எழுத்தின் மற்ருெரு பகுதி பரந்த அளவில் அவர் மேற்கொண்ட பயணங்களின் அனுபவ விவரிப்புகள் ஆகும். இந்த இனத்தில் பதின்மூன்று புத்தகங்களைச் சேர்க்கலாம்:

1. மேரி லடாக் யாத்ரா-மீரட்டிலிருந்து, பஞ்சாப், முல்டான் டேரா காஜி கான், எல்லப்பிரதேசம், பஞ்ச் மாநிலம், காஷ்மீரம்: ஜோஷிவாக் கணவாய் வழியாக லடாக் போனதை விவரிக்கிறது. ஆர்கால், குல்லு வர்ணனைகளும் இதில் சேர்ந்துள்ளன. இது 1939-ல் எழுதப்பட்டது.

2. லங்கா - அனுராதபுரம், பொலன்னருவை கொழும்பு பற்றிய விவரிப்புகளும், அவற்றின் வரலாற்றுக் குறிப்புகளும் கொண்டுள்ளது. இது ராகுல் யாத்ராவழி-முதல் பாகத்திலும் இணைக்கப்பட்டிருக்கிறது.

3. மேரி ஆரோம் யாத்ரா-1935-ல் பிரசும் பெற்றது. அவர் பாதந்த் ஆனந்த கெளசல்யாயனுடன் சேர்ந்து கொழும்பிலிருந்து