பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5cm ராகுல் சாங்கிருத்யாயன்

ஆகவே, அவர் விரும்பிய மனிதர்கள்ைப்பற்றிக் குறிப்பிடுகையில் அவர் வியந்து பாராட்டி அவர்களுடைய வாழ்க்கைக் குறிப்புகளே உயர்வாக எழுதியபோது, அவர்களது ஊர்சுற்றும் பண்பைச் சேர்த்தெழுதுவதில் ஆர்வம் காட்டினர். கூம்கார் ராஜ் நரேந்திர யாஷ், கூம்கா பட் திவாகர், மகா பர்யாதக் இந்துப் பர்யாதக் நைன் சிங், பாக்கர் பாபா போன்ற அடைமொழிகள் அநேக இடங்களில் காணப்படுகின்றன. பயணிகள், சுவாமிகள், சாதுக்கள், பிக்குகள், பதத்துகள், மகந்துகள், பிரமச்சாரிகள், பரிவ்ராஜக்குகள். பாபாக் கள் முதலியவர்களே அவர் நேசித்தார். அதித் ஸே வர்த்தமான், ஜின்கா மேன் கிரித்தஞ்ஞளு என்ற இரண்டு தொகுதிகளில் இவர் களேப் பற்றிய குறிப்புகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ராகுலின் நண்பர்கள் சாதுக்கள் மாத்திரம் அல்ல; பண்டிதர்களும், பல்வேறு மத நம்பிக்கையினரும்-இந்து, முஸ்லிம், பெளத்தர், ஜைனர், கிறிஸ்துவர், சீக்கியர், நாத்திகர்கள்கூட-அவருடைய நண்பர் களாக இருந்தனர். இப்புத்தகங்களிலிருந்து தரப்பட்டுள்ள நான்கு மேற்கோள்கள் அவருடைய மனசின் விசாலத் தன்மையை எடுத்துக்காட்டும்:

ஆச்சார்ய நரேந்திரதேவ்

நரேந்திரதேவ் தனது வாழ்வின் இறுதிவரை ஒரு பகுத்தறிவு வாதியாகவே இருந்தார். முதிய வயது அவரை மாற்றிவிட வில்லை; மற்றவர்கள் பொதுவாக வயது ஆக ஆக வேறு ஆட்களாக மாறிப்போகிரு.ர்கள். மதவாதிகள் பற்றி அவர் கேலி பேசுவது வழக்கம். அவர் வேடிக்கையாக சோன்ச் பந்த் (பறவைமூக்கு மதம்) ஒன்றை ஆரம்பித்தார். தாங்களாகவே அமைத்துக் கொண்ட இந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் சந்திக்கும்போது, வலது உள்ளங்கையை ஒரு பறவைமூக்கு மாதிரி முன்னே நீட்டி வணக்கம் தெரிவித்துக்கொள்வார்கள். அவர் நல்ல படிப்பாளி, தீவிர சிந்தனையாளர், அறிவுக்கூர்மையும் நகைச்சுவை உணர்வும் நிரம்பப் பெற்றவர், ஒரு இலட்சியவாதி. அவர் சோஷலிசத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவர். மார்க்ஸ் அவரை போது மான அளவு பாதித்திருந்தார். நான் கம்யூனிசத்தால் ஈர்க்கப் பட்டிருந்தேன். சோஷலிஸ்ட் கட்சிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிடையே நல்ல உறவுகள் கிடையாது. என்ருலும்கூட எங்கள் சொந்த உறவுகள் எப்போதும் சுமுகமாகவும் மாறுபடாமலும் இருந்தன. நாங்கள் இணைந்து கம்யூனிஸ்ட் மேனியெஸ்டோவை மொழிபெயர்த்தோம். அப்போது, உப்பு சத்தியாக்கிரக சமயத் தில், நான் காசி வித்தியாபீடத்தில் இருந்தேன். அது பிரேம் சந்தின் அச்சகத்தில் அச்சிடப்பட்டது. . . (ஜின்கா மேன் கிரீத்தஞ்சூளு, பக்கங்கள் 183-184).