பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய சாதனைகள் 纷器

இறுதிபூர்வமான பரிகாரம் இருப்பதாக புத்தர் கண்டாரில்லை. சந்நியாசிகள் மற்றும் சந்நியாசினிகளிடையே ஒரு சமத்துவ ஒழுங்கு முறையை அவர் உபதேசித்தார். அவர் தனது இறுதிச் செய்தியாக ந ஹி வீரென் வீராணி சமாந்தித் குதாச்சன் (பகைமையும் வன்முறையும் ஒருபோதும் விரோதத்தையும் வன்முறையையும் தணித்து விடாது) என்று கூறினர்.

"யுத்தத்திற்குப் பிறகு, அமைதியின் இந்த மகத்தான செய் தியை உலகத்தாருக்கு அறிவித்த மாமனிதன் உலகத்திலேயே காந்தி தவிர வேறு எவருமிலர். புத்தரின் சுய தன்மை அவரிடம் இருந்ததில்லை. சந்தர்ப்பத்துக்குப் புறம்பாக நீக்கிவிடப்படு மால்ை, காந்தியின் சத்தியமும் அகிம்சையும் ஒரு தனி நபரின் பைத்தியக்காரத்தனமாகவே தோன்றும். ஆனல் காந்தி உலக அன்பையும் சமாதானத்தையும் போதித்தார். இவ்வகையில் காந்தி புத்தரைவிட அதிகமாக வேதனைப்படவேண்டியிருந்தது என்றுகூட நான் சொல்வேன். கொலைகார வழிப்பறிக் கொள்ளைக் காரனை அங்குலிமாலனின் சவாலை புத்தர் அச்சமின்றி எதிர் கொண்டார். ஆளுல், காந்தி, மற்றவர்களது, அநேக மனிதர் களின், உயிரைக் காப்பாற்றுவதற்காகத் துணிந்து தானே சுட்டெரிக்கும் நெருப்பினுடே பலமுறை குதித்தார். தென் ஆப்பிரிக்காவில் போயர் யுத்தத்தில் அவர் அப்படிச் செய்தார். அவர் தனது சோதனையை மறுபடியும் கல்கத்தாவிலும், டில்லி யிலும், மற்றும் பல இடங்களிலும் சாதி ஒற்றுமையை நிலைநாட்டு வதற்காகச் செய்தார். இதெல்லாம் யாருக்குத் தான் தெரியாது? அவர் ஒரு மகாத்மாதான். அதில் எவ்விதமான சந்தேகமு மில்லை. -

காந்தி கடவுளிடமும், சமூகம் பற்றிய மாருத நோக்குடை ஒரு தத்துவத்திலும் நம்பிக்கை கொண்டிருந்தபோதிலும், அவர் தனது தனி வழியில் செயல்ற்றவராக இல்லை. அவரும், புத்தர் போலவே, மிகப் பெரும்பாலானவர்களின் மிகப் பெரிய நலனுக் காக (பகுஜன்-ஹிதய்) வாழ்ந்தார். அவர் புத்த சமயத்தைத் தனது மதமாக ஏற்றுக்கொள்ளாமல் போனது பரிதாபத்துக்குரியது. ஆனல், நெடுங்காலமாக ஒரு புதுவகை காந்தி வெளிப்பட்டு வரு கிரு.ர். அவர் அரசியல் விடுதலையில் மட்டும் திருப்தி அடைய வில்லை. அதற்குப் பொருளாதார அடக்கமும் தர அவர் விரும்பு கிருர், அப்போதுதான் உண்மையான சமூகப் புரட்சி வரும். புத்தரைப்போல, காந்தியும், ஒருசில உயர்ந்த வர்க்கங்களிடம் அல்லது சாதிகளிடம் அதிகாரம் குவிந்து கிடப்பதுதான் உண்மை யான அபாயம் அல்லது சாபத்திடு என உணர்ந்து வருகிரு.ர். எனவேதான், உள்நாட்டு ராஜாக்களின் தன்னிச்சையான,