பக்கம்:ராஜாம்பாள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 {}{} இராஜாம்பாள்

னிடமிருந்து அவனே உடனே புறப்பட்டு வரச்சொல்வித் தந்தி வந்ததால், தந்தியைக் காண்பித்து ரஜாக் கேட் டான். நான் போகச் சொன்னேன்.

கோவிந்தன்: இரவு இரண்டு மணிக்கு ராஜாம் பாளை வரச் சொல்லி எழுதினதாகச் சொன்னயே. இரண்டு மணி என்று நீ எழுதியதாக உனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறதா? -

கோபாலன்: அதைக் குறித்துக் கொஞ்சமாவது சந்தேகம் இல்லை. ஏனென்றால், அந்தக் கடிதத்தை எழுதி வைத்துக்கொண்டு. வேலைக்காரனைக் கூப்பிட்டேன். அவன் வரச் சற்றுத் தாமதப்பட்டதால் அவன் வரும் வரையில் திருப்பித் திருப்பிக் கடிதத்தைப் படித்துக் கொண்டே இருந்தேன்:

கோவிந்தன். நல்லது, கோபாலா! நீ சொல்ல வேண்டியதெல்லாஞ் சொல்லித் தீர்த்துவிட்டாய். இனி, கொலை செய்தவனேக் கண்டுபிடிக்க வேண்டியது என்னைத் சேர்ந்தது. நீ அதுவரையில் தைரியமாய் இரு நாங்கள் போகிருேம். -

9. விசாரணை

இராஜாம்பாள் கொலை செய்யப்பட்டுக் கொளுத்தப் பட்டிருந்தாள் என்ற சமாசாரம் கேள்விப்பட்டவுடனே நீலமேக சாஸ்திரிகள், பிரக்ஞை தப்பிக் கீழே விழுந்து விட்டார். சாஸ்திரிகள் எப்போதும் சுயநலம் பாராட்டு கிறதே வழக்கமாய் இருந்தபோதிலும் இராஜாம்பாள் விஷயத்தில் மாத்திரம் உண்மையான வருத்தத்துை அடைந்தார். ஸ்திரீஹத்தி, சிசுஹத்தி, கோஹத்தி செய்யும் பரம சண்டாளனாக இருந்தாலும், அவனுக்கும் அந்தரங்கமான பிரியம் ஒரு பிராணியின் மேலாவது இருப்பது சகஜமாதலால் நீலமேக சாஸ்திரிகளுக்கு இராஜாம்பாள் பேரில் அத்தகைய வாஸ்தவமான பிரியம் இருந்தது ஆச்சரியமான காரியம் அல்ல. இராஜாம்பாள் இறந்துபோனுளே என்ற விசனம் சற்று நீங்கினவுடனே அவர் கஷ்டப்பட்டுச் சம்பாத்தியஞ் செய்து வைத்திருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/104&oldid=684646" இலிருந்து மீள்விக்கப்பட்டது