பக்கம்:ராஜாம்பாள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசாரணை 101.

ரூபாய் முழுவதும் செலவழிந்துவிட்டதே என்றும், இராஜாம்பாளுக்குச் சுமார் அறுபது லட்சத்துக்கு மேல் சீதனம் வருமென்றும், அப்படி அறுபது லட்சம் வரும் போது, தாம் ஐந்து லட்சம் செலவு செய்வது பிரமாதம் அல்லவென்றும் நினைத்துச் செலவு செய்தவராகையால், இப்போது இராஜாம்பாளையும், அவளுடைய சீதனத் தையும் தாம் அதிகக் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த சொத்து முழுவதையும் ஏககாலத்தில் இழந்துவிட்டதைக் குறித்து நீலமேக சாஸ்திரிகள் எவ்வளவு விசனத்தை அடைந்திருப் பார் என்று சொல்லுதல் எளிதல்ல. இதை வாசிப்பவர்களே அவருக்கு எவ்வளவு வருத்தம் இருந்திருக்குமென்று ஊகித்துக்கொள்ளலாம். இராஜாம்பாளும் கோபாலனுஞ் சேர்ந்து சதியாலோசனை செய்து தம்மை அவமானப் படுத்தவேண்டும் என்ற எண்ணங்கொண்டு இப்படிச் செய்தார்கள் என்ற சமாசாரம் தெரிந்தவுடனே முன்ஞல் எவ்வளவு வருத்தத்தை அடைந்தாரோ அவ்வளவுக்குச் சந்தோஷமடைந்தார். மூதேவியுடன் ஸ்ரீதேவி பிறந்தது. போலும், சேற்றில் தாமரை மலர் உண்டாகிறது போலும், சிப்பியிலிருந்து நல் முத்து அகப்படுவது போலும், துர்க்குணங்களே திரண்டு உருக்கொண்டு நீலமேக சாஸ்திரி களாகப் பிறந்தன என்று எண்ணினபோதிலும், ஒருவன் குற்றஞ் செய்திருப்பான் அல்லது செய்திருக்கமாட்டான் என்று கண்டுகொள்ளக் கூடிய விசேஷமாகிய நற்குணம் அவரிடம் குடிகொண் டிருந்ததாகையால், இராஜாம்பா ளின் கொலையைக் குறித்த சமாசாரங்கள் முழுமையும் கேள்விப்பட்டவுடனே, ஒருகாலும் கோபாலன் கொலே செய்திருக்கமாட்டானென்றும், வேறே யாரோ கொலை செய்திருப்பார்களென்றும் நிச்சயமாய்த் தெரிந்து கொண்டபோதிலும், தமக்கு விரோதமாகக் கோபாலன் சதியாலோசனை செய்ததால், எப்படியாவது அவன் தண் டனே அடையவேண்டுமென்று எண்ணிக்கொண் டிருந்தார். தமக்கு விரோதமாய்ச் சதியாலோசனை செய்ததற்குக் கோபாலனைச் சித் திரவதை செய்ய நீலமேக சாஸ்திரி களுக்கு அதிகாரம் இருந்திருந்தால் கோபாலனுடைய ஒவ்வொரு மயிர்க்காலிலும் காயம்படும்படி சித்திரவதை செய்திருப்பார். கருணைபொருந்திய இந்திய கவர்ன்மென்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/105&oldid=684647" இலிருந்து மீள்விக்கப்பட்டது