பக்கம்:ராஜாம்பாள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசாரனே | 13

நடேச சாஸ்திரி: ராஜாம்பாளைக் கேட்டால் அவள் சொல்லுவாள்! எனக்குத் தெரியாது.

துரைசாமி ஐயங்கார்: உங்களுக்கும் ராஜாம்பா

ளுக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது என்றும், அவள் எப்போது சென்னைக்கு வந்தாலும் தங்களுடைய வீட் டிற்கு வருவதில் லே என்றும், தங்களிடம் பேசுவதில்லை என்றும் சொல்லுகிறார்களே! அது உண்மைதான?

நடேச சாஸ்திரி: போன புதன்கிழமை வரையில் என் வீட்டிற்கு வரவில்லை என்பதும் என்னிடம் பேச வில்லை என்பதும் உண்மைதான்.

துரைசாமி ஐயங்கார்: இத்தனை வருஷகாலமாகப் பேசாமலும் தங்களுடைய வீட்டிற்கு வராமலும் இருந் தவள் போன வாரத்தில் வந்து பேசினுள் என்பது சற்று ஆச்சரியமாக இருக்கவில்லையா?

நடேச சாஸ்திரி: தாங்கள் இன்று கேட்பதெல்லாம் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. தாங்கள் இத்தனை வருஷ காலமாய் என்ன இப்பேர்ப்பட்ட கேள்விகளெல்லாம் கேட்டீர்களோ? இன்று ஏன் கேட்கி நீர்கள்? இது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. மனிதருக்கு ஒரு நாளேக்கு இருக்கப்பட்ட சுபாவம் ஒரு நாளைக்கு இருப்பதில்லையே? ஒருவேளை, நாம்தான் கல் யாணஞ் செய்துகொள்ளப் போகிருேம்; இனி ஏன் இவரிடம் விரோதம் வைக்கவேண்டும் என்னும் எண்ணத் துடன் என்னைச் சமாதானப்படுத்துவதற்காக வந்திருக்க லாம். -

துரைசாமி ஐயங்கார்: ஆல்ை தங்களுக்கும் ராஜாம் பாளுக்கும் இதற்கு முன்னுல் விரோதம் இருந்ததோ?

நடேச சாஸ்திரி: தங்களுக்குத் தெரியாதா? துரைசாமி ஐயங்கார்: எனக்குத் தெரிகிறதற்கும் இப்போது தாங்கள் ஜவாப்புச் சொல்லுகிறதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று அப்போதே சொன்னேன். இதுவரையில் தாங்கள் பார்த்திராத வக்கீல் ஒருவர் கேள்வி கேட்டால் எப்படித் தாங்கள் மறுமொழி சொல்லுவீர்களோ அப்படியே இப்போதும் தாங்கள் சொல்லவேண்டும்,

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/117&oldid=684659" இலிருந்து மீள்விக்கப்பட்டது