பக்கம்:ராஜாம்பாள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 இராஜாம்பாள்

அது கட்டிக்கொள்ளுமா? அதற்கு இன்னும் சரியாய் ஒரு மாதம் ஆகவில்லையே!

கனகவல்லி: நன்முய்ச் சொன்னிர்கள்! இன்னும் ஒரு மாசம் ஆகவில்லையா? கார்த்திகை மாசம் ஒன்று, மார்கழி மாசம் இரண்டு, இப்போது பிறந்த தை மாசம் மூன்று ஆக மூன்றுமாச காலம் ஆகிவிட்டதே.

சாமிநாத சாஸ்திரி: கார்த்திகை மாசம் 30வ குழந்தை பிறந்தது. இன்று தைமாதம் 3 வ. ஆயிற்று. ஒரு மாத மும் நாலு நாளும் ஆயிற்று. நீ மூன்று மாதம் கணக்குச் சொல் விவிட்டாய். போகட்டும், நீ சொன்னபடி மூன்று மாதம் ஆளுல்தான் என்ன? அது பாவாடை கட்டிக் கொள்ளுமா? அது கட்டிக்கொள்ளக்கூடிய வயசு வரும் போது எனக்கு வாங்கிக் கொடுக்கத் தெரியும். இந்த முப்பத்து நான்கு நாளேக்குள் அது ஆறு தரஞ் செத்து ஆறு தரம் பிழைத்தது. அதற்குப் பாவாடை கட்டிக் கொள்ளக்கூடிய வயசு வருகிறவரைக்கும் அது சாகிறதோ

பிழைக்கிறதோ, யார் பார்த்தார்கள்?

கனகவல்லி. நீங்கள் ஒரு பாவாடை வாங்கிக் கொடுக்க வேண்டுமே, அதில் உங்கள் பணம் செலவாகி விடுமே என்ற வருத்தத்தால் அந்தப் பிள்ளை செத்துப் போக வேண்டுமென்று சுவாமியைப் பிரார்த்திக்கிறீர்கள். இந்தப் பாழும் பணத்தை நீங்கள் செத்த பிற்பாடு உங்களுடைய தலையிலேயே கட்டி அனுப்பப்போகிரு.ர்கள் போல் இருக்கிறது. மகராஜனய் அப்படியே கட்டிக்

கொண்டு போங்கள் ; நீங்கள் பாவா டை வாங்கிக் கொடுக்கவும் வேண்டர்ம், குழந்தை சாகவேண்டு

மென்று பிரார்த்திக்கவும் வேண்டாம். இம்மாதிரி கெட்ட எண்ணம் மனத்தில் இருப்பதனுல்தான் தங்கப் பதுமைகளைப்போல் ஐந்து பிள்ளைகளைக் குழியில் வைத்து விட்டுச் செக்கடி முண்டம்பேர்ல் உட்கார்ந்துகொண் டிருக்கிறீர்கள்.

சாமிநாத சாஸ்திரி: என்னுடைய கெட்ட எண்ணத் தால் ஒரு பிள்ளேசுடச் சாகவில்லை; உன்னுடைய முட்டாள் தனத்தாலும் டாக்டர்களும் நானுஞ் சொன்ன வார்த் தைகளை நீ கேளாததனலும் பிள்ளைகள் செத்து ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/12&oldid=677378" இருந்து மீள்விக்கப்பட்டது