பக்கம்:ராஜாம்பாள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடுகுடுப்பைக்காரன் 123

போடணு மிண்ணுஞ் சொல்லுருங்க. ரெண்டு மணி நேரத் துக்கு ஆள் யாரும் வராத அறை ஒண்ணு இப்பவே காமிச்சை யிண்ணு வேணு நாயுடை இண்ணக்கி எட்டு நாளுக்குள்ளே கொண்ணுந்து விட்டுடறேன். அந்தப் பர்மாக்காரியை வேணுமுண்ணுலுங் கொண்ணுரடறேன். எனக்கு நீ ஒரு காசுகூட இப்போ குடுக்கவேணும், அவுங்க வந்து செளக்கியமாச் சேர்ந்த பிற்பாடு நீங்க சொன்ன யணங் குடுங்க. இப்பவே யாரும் வராத அறை ஒண்ணு மட்டும் ரெண்டு மணி நேரத்துக்குக் கொடுங்க. அப்போ பாருங்க, ஜக்கம்மா கெட்டிக்காரத்தனத்தை,

சுந்தரம்: எங்க அம்மா படுக்கிற அறைக்குத்தான் யாரும் வரமாட்டாங்க. அம்மா வெளியே போயிருக்கி ருங்க. வரப் பத்து மன்னி ஆகும். அதுக்குள்ளே மந்திரம் போட்டுட்டு வருவதாயிருந்தா அந்த அறையைக் கொடுக் கிறேன். எங்கம்மா கிட்டேண்ணுலும் வேறே யார் கிட்டேண்ணுலும் அந்த அறைக்கு உன்னை உட்டேண்ணு சொல்லாதே. -

குடுகுடுப்பை: ஜல் தியாய்க் கொண்டுபோய் விடு. நேரம் ஆச்சிண்ணு, பாவி பர்மாக்காரி மந்திரம் ஏறிடும். ஏறிட்டா ஆராலேயும் முடியாது. -

இப்படிச் சொன்ன உடனே சுந்தரம் வழியிலிருந்த ஆட்களேயெல்லாம் போக்குக் காட்டி வேறு இடங் களுக்குப் போகச் சொல் லிவிட்டு, குடுகுடுப்பையை அழைத்துக்கொண்டுபோய் லோகசுந்தரி படுக்கும் அறைக்குள் விட்டுவிட்டுக் கதவை வெளியே தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு தூரப்போகாமல் அங்கேயே சுற்றிக் கொண்டு, அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பார்த்துக் கொண்டிருந்தாள். லோகசுந்தரியின் அறையில் போட்டு மூடப்பட்டவுடனே குடுகுடுப்பை வேஷம் போட்டுக் கொண்டு வந்த துப்பறியும் கோவிந்தன் இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள், தான் தேட வேண்டிய இடங்களை யெல்லாந் தேடி, கண்டுபிடிக்க வேண்டிய சமாசாரங் களேக் கண்டுபிடித்துவிட வேண்டுமே என்ற எண்ணத் துடன் அங்கே யாரும் வராதபடி உள் தாழ்ப்பாளைப் போட்டுவிட்டுக் குடுகுடுப்பைப் பைக்குள் தயாராய்க் கொண்டுவந்திருந்த சாவிக்கட்டுகளை எடுத்து ஒவ்வொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/127&oldid=684669" இலிருந்து மீள்விக்கப்பட்டது