பக்கம்:ராஜாம்பாள்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகினி 137

கோபாலன்:. ஆனல் கொலை செய்தவன் இன்னுன் என்று உனக்குத் தெரியும்போல் இருக்கிறது. உனக்குத் தெரிந்திருக்கும்போது அவன் வெளியில் திரிந்துகொண் டிருப்பதையும், நான் ஜெயிலில் அடைபட் டிருப்ப தையும் நீ எப்படிப் பார்த்துக்கொண் டிருக்கிறாய்? உனக்கு என்மேல் பிரியம் இருப்பதாக நீ பாவனை செய்கிறபடி வாஸ்தவமாகப் பிரியம் இருந்தால் நான் ஜெயிலில் அடைபட் டிருப்பதை நீ பார்த்துக்கொண் டிருப்பாயோ? -

லோகசுந்தரி: கொலை செய்தவன் இன்னுன் என்று எனக்குத் தெரிந்திருந்தால் நான் இதுவரையில் நீ ஜெயி வில் இருக்கப் பார்ப்பேனே? ஒருகாலும் பார்க்கமாட் டேன். உன்பேரில் இருக்கும் அந்தரங்கப் பிரியத்தால் ராஜாம்பாளேக் கொலைசெய்தவனைக் கண்டுபிடிக்கும்படி கெட்டிக்காரனென்று பேரெடுத்திருக்கும் ஒரு துப்பறி பவனே நியமித்து அமோகமாய்ப் பொருள் செலவழித்து வருகிறேன்; அவன் இன்னும் மூன்று தினங்களில் கொலை செய்தவனைக் கண்டுபிடித்துவிடுவதாக இன்று காலையில் உறுதியாய் வாக்களித்திருக்கிருன். அந்த நற் செய்தியைத் தெரிவிப்பதற்கே இங்கு வந்தேன்.

கோபாலன்: நீ என் நிமித்தம் எடுத்த பிரயாசையை என் ஆயுள்பரியந்தம் மறவாமல் இருப்பேன். - லோகசுந்தரி: முன்னலேயே அந்நியர்களிடம் பேசும் உபசார வார்த்தைகளே என்னிடம் பேச வேண்டாம் என்றேனே! மறுபடியும் ஏன் அப்படிச் சொல்லு கிறாய்? நான் கேட்ட முக்கியமான கேள்விக்கு இதுவரையில் நீ விடை சொல்லாமல் ஏன் காலதாமதம் செய்கிறாய்?

கோபாலன்: முன்னலேயே சொல்லிவிட்டேனே. லோகசுந்தரி: வழவழவென்று சொல்வதிற் பயன் இல்லை; உண்டு, இல்லை என்று நன்றா ய் யோசனைசெய்து சொல். , -. -

கோபாலன்: தீர்க்காலோசனை செய்துதான் சொன் னேன்; அப்படிச் சொல்வது எனக்கு அதிக வருத்தத் தைக் கொடுத்த போதிலும் உண்மை உரைப்பதே எனது வழக்கமாதலால் உன்னைக் கல்யாணஞ் செய்துகொள்வது

முடியாத காரியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/141&oldid=684683" இருந்து மீள்விக்கப்பட்டது