பக்கம்:ராஜாம்பாள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஷன்ஸ் கோர்ட்டு 4

பா. கொக்கு துரை : இன்ஸ்பெக்டர் நாயுடவர்களே! இந்த வழக்கில் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை விவர மாய்ச் சொல்லுங்கள். ~ மணவாள நாயுடு : சென்ற ஜனவரிமீ 26வ. புதன் கிழமை ராத்திரி இரண்டு மணிக்கு ராஜாம்பாளைக் காணுேமென்ற சமாசாரம் தெரிவித்து அவளைக் கண்டு பிடிக்கச் சொன்னர்கள். அவள் பெட்டியைத் திறந்து பார்த்ததில், கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் முதல் காகிதம் அகப்பட்டது. முதல் நம்பர் காகிதத்திற். குறிப்பிட்ட இடத்தைப் போய்ப் பார்க்கையில் இரண்டா வதாகத் தாக்கல் செய்திருக்கும் கடிதம் அகப்பட்டது. அந்தக் காகிதத்திற் குறிப்பிட்ட இடத்திற்குப் போய்ப் பார்க்கையில் கைதி, தன் மார்பின்பேரில் பிரேதத்தைச் சாய்த்து வைத்துக்கொண்டு அழுவதாகப் பாவனை செய்து கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் ரத்தந் தோய்ந்த கட்டாரி கிடந்தது. பிரேதத்தை ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பிவிட்டுக் கோபாலனே ஸ்டேஷனில் அடைத்து வைக்கச் செய்தேன். கொஞ்ச நேரத்திற்கு அப் பால் கொலை நடந்த இடத்தில் நன்றாய்த் தேடிப் பார்த்த தில், மூன்றாவது நம்பராகத் தாக்கல் செய்திருக்கும் கைக் குட்டை அகப்பட்டது. .

துரைசாமி ஐயங்கார் : ராஜாம்பாள் இறந்ததற். குக் காரணம் என்ன?

மணவாள நாயுடு : டாக்டர்களைக் கேட்டால் விவர மாய்த் தெரியும்.

துரைசாமி ஐயங்கார் : வாஸ்தவந்தான் ; கோபா லனைச் சிறையில் அடைத்தபோது டாக்டர்கள் அபிப்பிரர் யத்தைக் கேளாமல்தானே அடைத்தீர்கள்! அப்போது எந்த விதமாய்க் கோபாலன் கொலை செய்திருப்பானென்று நினேத்து அடைத் தீர்கள்?

மணவாள நாயுடு : கட்டாரியினல் குத்திக் கொன்றி ருக்கலாம் என்று நினைத்து அடைத்தேன்.

துரைசாமி ஐயங்கார் . பின்னல் வேறு எந்தக் கார ணங்களால் இறந்திருப்பதாகத் தெரியவந்தது? o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/153&oldid=684695" இலிருந்து மீள்விக்கப்பட்டது