பக்கம்:ராஜாம்பாள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 2 இராஜாம்டாள்

வாசி குணமாகிவிடுமென்றும், அதற்கு அடுத்த நாளைக் குள் பூராவாய்க் குணமாகிவிடுமென்றும் சொல்வி, ஷாப் பில் புதிதாக விற்கும் ஆயுதம் வாங்கவேண்டுமென்று இருபத்தைந்து ரூபாய் கேட்டான். நீ என்னிடம் சொன்னல் நான் ஆட்சேபம் செய்வேனென்று பக்கத்து வீட்டு நடேச தீட்சிதரிடமிருந்து எனக்குத் தெரியாமல் வாங்கிக் கொடுத்தாய். பண்டிதன் ரூபாயை வாங்கிக் கொண்ட ஒரு நிமிஷத்திற்குள் கூrவரம் செய்யும் கத்தி கொண்டு அவனால் ஆனவரைக்கும் அறுத்து ஏதோ பச்சிலே வைத்துக் கட்டிவிட்டுப் போய்விட்டான். அதனல் ரனஜன்னி பிறந்து மறுநாளே குழந்தை இறந்தது. நாட்டு வைத்தியன் மறுநாள் முக்கால்வாசி குணமாகு மென்று சொன்னன். ஆனல் அவனுடைய சாமர்த்தி பத்தால் மறுநாளே குழந்தையைச் சகலவிதமான வியாதி யிலிருந்தும் நிவர்த்தி செய்துவிட்டான். அன்றே டாக் டரைச் சாட்சி வைத்துக்கொண்டு அந்தப் பரமசண்டா ளனைப் பதின்ைகு வருஷம் ஜன்மதண்டனை யடையும்படி செய்திருப்பேன். ஆனல் ஜனங்களெல்லாம் உன்னுடைய புத்திசாலித்தனத்தைக் குறித்து வெகுவாய்ச் சிலாகித்து உன்னேப் பார்க்கும்போதெல்லாம், இப்பேர்ப்பட்ட புண் ணிையவதி போகிருள்!’ என்று வாழ்த்துவார்களே என்ற பயத்தால் அத்துடன் நிறுத்தும்படி நேரிட்டது.

கனகவல்லி: ஏன் மாறுபாஷையாய்ப் பண்டிதனைத் திவாந்தரம் ஏற்றி இருக்கலாமென்று சொல்லுகிறீர்கள்? பரிஷ்காரமாய் என்னேயுங்கூடச் சேர்த்துத் தீவாந்தரம் ஏற்றியிருப்பேன் என்று சொல்லுங்களேன். உங்களை யார் வந்து அப்படிச் செய்யவேண்டாமென்று தடுத்தார்கள்? நான் ஏதாவது கிமானென்றேன? இன்னும் கேட்கக் கேட்க அடுத்த பிள்ளையைத் திருஷ்டி தோஷம் நிவாரணே செய்வதற்காக விளக்கு வைத்துப் பார்க்கும்போது, தலைசுற்றிவிட, அங்கே கொண்டு வந்து நிறுத்தியிருந்த கிடா பாய்ந்து அதல்ை அந்தக் குழந்தை இறந்து போயிற்றே, அதையும் நான்தான் கொன்றேன் என்பீர் கள். வாயில் வந்தபடி எல்லாம் நீங்கள் சொல்லவும் நான் கேட்கவும் என் தலையில் ஆண்டவன் எழுதியிருக்க, உங்களையாவது அந்தப் பாழும் தெய்வத்தையாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/16&oldid=677382" இலிருந்து மீள்விக்கப்பட்டது