பக்கம்:ராஜாம்பாள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 இராஜாம்பாள்

எழுதிய கடிதம் அகப்பட்டுவிட்டது. சுடலைமாடன் கோவில் தெரு, 29-வது நெம்பர் வீட்டில் போய்ப் பார்த் கையில், ராஜாம்பாள் பிணத்தைத் தன் மார்பின்மேல் சாய்த்துக்கொண்டு கோபாலன் உட்கார்ந்திருந்தான், இவ்வளவும் போதாதென்றால், தோ’ என்னும் எழுத்தை ஒர் ஒரத்தில் எழுதப்பட்ட ரத்தந் தோய்ந்த கைக்குட்டை யொன்று கொலே செய்த இடத்தில் துண்டு துண்டாய்க் கிழித்துச் சாம்பலில் மறைக்கப்பட்டிருந்தது. இத்தனை சாட்சியங்களில் ஏதாவது ஒன்றைக் கொண்டே இதுவரையில் அநேகரைக் குற்றவாளியென்று தீர்மானித் திருக்கிரு.ர்கள். இவ்வளவு சாட்சியங்கள் இருக்கும்போது தாங்கள் வேறுவிதமான அபிப்பிராயத்திற்கு வர முடியா தென்று நான் நிச்சயமாய் நம்புகிறேன்.

துரைசாமி ஐயங்கார்: கனவான்களாகிய ஜூரர் களே! என் நண்பர் கொக்கு துரையவர்கள் இப்போது சாமர்த்தியமாகப் பேசிய வார்த்தைகளினல் தாங்கள் ஒருவிதமான அபிப்பிராயத்திற்கு வந்திருக்கமாட்டீர் களென்று நம்புகிறேன். அப்படி உங்களில் எவராவது ஒருவித அபிப்பிராயத்திற்கு வந்திருந்தாலும், அதை மறந்துவிட்டு நான் எடுத்துக்காட்டும் ஒவ்வொரு விஷயத்தையும் நன்றாய்க் கவனித்து, நான் சொல்லுவ தில் எது நியாயமென்று தங்களுக்குத் தோன்றுகிறதோ அதை மாத்திரம் எடுத்துக்கொண்டு நியாயமென்று தோன்றாதவைகளைத் தள்ளிவிடும்படி கேட்டுக்கொள்ளு. கிறேன். சாதாரணமாக ஜூரர்கள் கோர்ட்டுகளில் வரும் குளிர்ந்த காற்றினுல் உட்கார்ந்தபடியே துரங்கிக்கொண் டிருந்துவிட்டுக் கடைசியில் குற்றவாளியா குற்றவாளி யல்லவா என்று கேட்டால் ஜூரர்களின் தலைவராக நியமிக்கப்படுகிறவர் எப்படி அபிப்பிராயங் கொள்ளு கிருரோ அப்படியே தங்களுடைய அபிப்பிராய மென்று தலையை அசைத்துவிட்டுப் போவது வழக்கமா யிருக்கிறது. ஜூரர்களே நியமிப்பது எதற்காகவென்று நான் சொல்லித் தங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. இருந்தாலும் ஜூரர்களுடைய கடமைகளையும் அவர்கள் சரியானபடி தங்களுடைய வேலைகளைச் செய்யாவிட்டால் அதல்ை ஏற்படும் கேடுகளையும் சொல்லுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/168&oldid=684710" இலிருந்து மீள்விக்கப்பட்டது