பக்கம்:ராஜாம்பாள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 இராஜாம்பாள்

ராஜாம்பாள் குரலைக் கண்டுபிடித்தவர் கோபாலனு டைய குரலாயிருந்தால் அதையும் கண்டுபிடித்திருப்ா ரல்லவா? ஆகையால் சாமி நாயுடுவுக்கு நன்றாய்த் தெரி யாத ஒருவர் கொலே செய்ததாக ஏற்படுகிறதல்லவா?

கனவான்களே! கொலே செய்தவன் கொலை செய்த உடனே ஒடிப்போவான? அல்லது உட்கார்ந்துகொண்டு பிணத்தை எடுத்துத் தன் மார்பின்மேல் சாய்த்துக் கொண்டு அழுதுகொண் டிருப்பான? இதைச் சற்று யோசித்துப் பாருங்கள். தான் கொலை செய்திருந்தால் அந்தப் பிணத்தின் சமீபத்தில் இருக்கவே கொலை செய்த வனுக்குச் சாத்தியமாகாதே. அப்படியிருக்க, கொலே செய்தவன் பிணத்தை எப்படித் தன் மார்பின்மேல் சாய்த்து வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பான்?

அப்பால் அஸிஸ்டன்ட் சர்ஜன் காவன்ன துரையி னுடைய வாக்கு மூலத்தாலும், சர்ஜன் பால் துரையின் வாக்குமூலத்தாலும் என்ன ஏற்படுகிறது? கட்டாரியால் குத்தின காயம் ஒன்று துப்பாக்கியின் குண்டு பாய்ந்த காயம் ஒன்று: ஆக இரண்டு காயங்கள் இருந்ததாகவும் இரண்டும் ஏக காலத்தில் ஏற்பட்ட காயங்களென்றும், இருவரால் ஏற்பட்ட காயங்களென்றும் திட்டமாய்ச் சொன்னர்களே! ராஜாம்பாள் இறப்பதற்குச் சுமார் ஐந்துமணி நேரத்திற்கு முன்னல் விஷம் கொடுக்கப்பட் டிருப்பதாகவும் சொன்னர்களே! கோபாலனுக்குத் துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசென்ஸ் கிடையாதென் றும், கோபாலனுடைய வீட்டைச் சோதித்ததிலும் துப் பாக்கிய்ாவது, குண்டுகளாவது, விஷமாவது அகப்ப்ட வில்லையென்றும் மணவாள நாயுடு அவர்கள் சொன்ஞர் களே! கோபாலன் விஷம் வாங்கினனென்றாவது, அல் லது கட்டாரி கோபாலனுடையதென்றாவது அல்லது கோபாலனுக்குச் சொந்தத் துப்பாக்கியில்லாததால் வேறே யாரிடமிருந்தாவது துப்பாக்கி இரவல் வாங்கின னென்றாவது ருஜுப்படுத்தவில்லை. ஆகவே, கோபாலன் கொலை செய்திருப்பானென்பதை ருஜுப்படுத்துவதற்கு முக்கியமாகிய விஷயங்களில் ஒன்றாவது ருஜுப்படுத்தப் பட்வில்லை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/172&oldid=684714" இலிருந்து மீள்விக்கப்பட்டது