பக்கம்:ராஜாம்பாள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இராஜாம்டாள்

இந்த விஷயத்தைக் குறித்து நீ பேசுவதில் எள்ளத்தனே யும் உபகாரங் கிடையாது. .

கனகவல்லி: நம் பிள்ளையைப்போல் அ வ னே நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த் துக் கடைசியாக நம் பெண்ணே அவனுக்குக் கொடுக்கா மல் வேறே தெருவிற் போகுங் கோபாலனுக்குக் கல் யாணஞ் செய்துகொடுப்பேன் என்கிறீர்கள். நான் பாவி; இந்த ஜன்மத்தை வைத்துக்கொண் டிருப்பதில் சுகிர்தம் என்ன? நீங்களே பெண் கொடுக்காவிட்டால் அவனுக்கு வேறே யார் பெண் கொடுக்கப்போகிறார்கள்? ஊரெல்லாம் என்னைப் பார்த்துச் சிரிப்பதையும் நான் அவர்கள் செய்யும் நையாண்டிகளைப் பார்த்துக்கொண் டிருப்பதையும்விட உங்கள் கண் முன்னலேயே நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்துப்போகிறேன்; அப்பால் உங்க ளுக்கு எப்படிச் செய்ய இஷ்டமோ அப்படிச் செய்து கொள்ளுங்கள்.

இப்படிச் சொல்லி அவர் உடம்பின்மேல் விழும்படி தாரை தாரையாய்க் கண்ணிர்விட்டாள்.

சாமிநாத சாஸ்திரி; நீ நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகிறேனென்றாலும் அல்லது குளங் கிணறுகளில் விழுந்து சாகிறேனென்றாலும் அல்லது அப்படியே செத்துப்போளு லும் சரி, ராஜத்தை ஒரு நாளும் அந்தத் துஷ்டனுக்கு விவாகஞ் செய்து கொடுக்கமாட்டேன். அதைவிட நம் பெண்ணைக் கிணற்றில் தள்ளி மேலே ஒரு கல்லைப் போட்டு விடுவேன். இந்தப் பெண் விஷயம் ஒன்று தவிர வேறே அந்தத் துஷ்டனுக்கு நான் பிரியமாய் வளர்த்த தோஷத் திற்காக நீ எதைச் செய்யச் சொன்னலும் செய்கிறேன். கனகவல்லி: ஆனால் நிச்சயமாய்ப் பெண் கொடுக் கவே மாட்டீர்கள்? -

சாமிநாத சாஸ்திரி: கொடுக்கவே மாட்டேன்.

கனகவல்லி வேறே எது கேட்டாலுங் கொடுப் பேன் என்கிறீர்களே: அதாவது உண்மைதானே, இல்லையோ? . . . -

சாமிநாத சாஸ்திரி: உண்மைதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/22&oldid=677388" இலிருந்து மீள்விக்கப்பட்டது