பக்கம்:ராஜாம்பாள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

ஜோஸ்யத் தரகர்கள் 27

வழியில் வாங்கினுல் நான் ஒரு வழியில் வாங்குகிறேன். என்னிடம் அதிகப் பணம் இருக்கிறதென்று எல்லாருக்குக் தெரியுமே. என்னை அவன் இலகுவில் விடப்போகிருளு?’’ என்று எண்ணிக்கொண்டார். இதற்குள் சேவகர்கள் அவரை அவசரப்படுத்திக் கையோடு இட்டுக்கொண்டு போனார்கள். .

காஞ்சீபுரம் கஸ்பா சப்மாஜிஸ்டிரேட் நீலமேக சாஸ் திரிகள் என்பவர் செங்கல்பட்டிற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருந்த வைதிகராகிய சுப்பிரமண்ய சாஸ்திரி களின் ஏக குமாரர். சுப்பிரமண்ய சாஸ்திரிகள் தம் புத்திரனே அதிகக் கஷ்டப்பட்டு உஞ்சவிருத்திசெய்து பள்ளிக்கூடத்தில் வைத்தார். நீலமேக சாஸ்திரிகளும், வாலாயமாய் யூனிவர்ஸிடி பரீட்சைக் கேள்விகளைப் பரீட் சைக்குச் சில நாட்களுக்கு முன்னலேயே வருவித்து வைத் துக்கொண்டு அவற்றை வேண்டியவர்களுக்கு விற்றுப் பணஞ் சம்பாதித்து, கேள்விகளைக் கொடுக்கும் யூனிவர் விடி உத்தியோகஸ்தர்களுக்குப் பாதியைக் கொடுத்து விட்டு மற்றப் பாதியை வைத்து ஜீவனஞ் செய்துகொண் டிருக்கும் ஸ்ரீநிவாசையங்காரவர்கள் வீட்டில் வருஷம் பூராவாய் வேலைசெய்வார். பரீட்சைக் காலத்தில் மட்டும் போய் ஸ்ரீநிவாசையங்கார் சொல்லுகிறபடி எழுதிவிட்டு வந்துவிடுவார். இவர் பரீட்சையில் முதன்மையாகவே தேறிவந்தார். இப்படியே பி. ஏ. பரீட்சையிலும் தேறின. உடனே, சப் ஜட்ஜ் நரசிம்ம சாஸ்திரி பெண்னை ஐயாயிரம் ரூபாய் வரதட்சினையென்று வாங்கிக்கொண்டு கல் யாணஞ் செய்து கொண்டார். முற்காலத்தில் ஆசையை மண்ணுசை, பெண்ணுசை, பொன்னசை என்று மூன்று விதமாக வகுத்தார்கள். (தற்காலத்தில் மேலுத்தியோகஸ் தர்களைத் திருப்தி செய்யவேண்டுமானுல் முதலிற்சொன்ன மண்ணுசையை விட்டுவிட்டுப் பொன்னலும் பெண் ளுலும் திருப்தி செய்வது அநேகருடைய கொள்கையா யிருப்பது உலகமறிந்த இரகசியமே.) அப்படியே நமது நீலமேக சாஸ்திரிகளும் அவருடைய மேலதிகாரிகளைப் பொன்னலும் பெண்ணுலும் திருப்திசெய்து காஞ்சீபுரம் சப் மாஜிஸ்டிரேட் வேலை பெற்றார். அப்பால் அநேக இடங் களுக்கு மாற்றப்பட்டுக் கடைசியில் காஞ்சீபுரமே வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/31&oldid=677397" இலிருந்து மீள்விக்கப்பட்டது