பக்கம்:ராஜாம்பாள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் அகியாயங்கள் 53

ராமண்ணு: நாம் இருக்குமிடம் இன்னதென்று யோசிக்காமற் பேசுகிறீர்கள், நம்மால் சிறையிலிருந்து எப்படித் தெரிவிக்க முடியும்? நான் சொல்லுகிறபடி செய்தால் நல்லது. இல்லாவிட்டால் கெடுதல் உண்டா குமே தவிர நன்மை அடையமாட்டீர். ‘பசிக்குப் பணம் பழந் தின்றால் பின்னல் பட்டயாடு படலாம் என்பது போல் இப்போது அப்படியே செய்கிறேனென்று சொல்லி விட்டுப் போய், அப்பால் மாட்டேனென்றால் உங்களை என்ன செய்யக்கூடும்?

சாமிநாத சாஸ்திரி: நான் வாக்களித்துவிட்டு அப் பால் புரளவே மாட்டேனென்பது உமக்குத் தெரியாதா? வாக்களித்தால் செய்தே தீருவேன். ஆகையால் நான் ஒருபோதும் வாக்களிக்கமாட்டேன். - ராமண்ணு: சற்றுக் கிட்ட வாருங்கள். ஒரு ரகசி யம் சொல்லுகிறேன். இந்தச் சப் மாஜிஸ்டிரேட் அதி: யாயமாய்த் தண்டித்த ஒரு பிரபலமான போக்கிரி ஜெயிலி லிருந்து விடுபட்டு ஒரு வாரம் ஆயிற்று. அவன் இன்னும் மூன்று நாளைக்குள் இவர் உயிரை வாங்கிவிடத் தீர்மா னித்து, வேண்டிய ஏற்பாடுகள் செய்திருக்கிருன். நீர் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டு வாக்களித்தால் உம் மகளைக் கல்யாணம் செய்துகொடுக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது. நீர் கொடுத்த வாக்கும் தவற வேண்டியதில்லை; வெளிப்பட்டும் போகிறீர்.

சாமிநாத சாஸ்திரி: இப்படிக் கொலைசெய்ய ஏற் பாடு செய்கிருனென்று நீர் சப் மாஜிஸ்டிரேட்டாரிடம் சொல்லவேண்டாமா? என்னதான் கெட்டவனுயிருந்தா லும் கொலைசெய்யப் போகிருனென்று தெரிந்தும் சொல் லாமல் இருக்கலாமா? எவரையாவது பார்த்தவுடனே நான் இந்த விவரம் அவருக்குத் தெரிவிக்கும்படி செய் கிறேன்.

ராமண்ணு: நல்ல வேலை செய்கிறீர்! இந்தச் சமா சாரம் எனக்கு மாத்திரந் தெரியுமே அல்லாது வேறே யாருக்குந் தெரியாது. சப் மாஜிஸ்டிரேட்டாருக்கு யாரோ சொல்லிவிட்டார்களென்று அவனுக்குத் தெரிந் தால், முதலில் என்னைப் பைசல் செய்துவிட்டு அப்பால் அவரைக் கொலைசெய்வான். இந்தக் கலியுகத்தில் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/57&oldid=677423" இருந்து மீள்விக்கப்பட்டது