பக்கம்:ராஜாம்பாள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இராஜாம்பாள்

தில் தோன்றியது. உங்களுக்கு ஏற்பட்ட விசனம் இன்ன தென்று அறிந்து, என்னுல் கூடுமானல் நிவர்த்திசெய்ய வேண்டுமென்னும் எண்ணத்தோடு இப்போது உங்களைக் கேட்கிறேன். ..

சாமிநாத சாஸ்திரி: குழந்தாய், கேள். உன்னிடம் என் விசனத்தை இன்று சொல்லாவிடினும் இன்னும் சில தினங்களில் சொல்லித்திர வேண்டு மாகையால் சொல்லுகிறேன். உன்னுடைய ஜாதகத்தையும் கோபால னுடைய ஜாதகத்தையும் ஜோசியர்களைப் பார்க்கச் சொன்னபோது அவர்கள் பார்த்துவிட்டுச் செவ்வாய் தோஷம், இருக்கிறதென்று சொன்னபோது, எனக்கு அவர்கள் சொன்னது புரட்டென்று தெரிந்துதான் கும்பி கோணத்திலிருந்து நீலகண்ட சாஸ்திரிகளை வரவழைத் தேன். அவர் ஜாதகம் பார்த்துக்கொண் டிருக்கும் சமயத்தில் ராமண்ணு வந்ததும், அதற்கப்பால் நீல கண்ட சாஸ்திரி வெளிக்குப் போய் வந்தவுடனே மூச்சுப்பேச்சில்லாமல் விழுந்ததையும் யோசிக்கையில் அவரை யாரோ பயமுறுத்தினதன்மேல் நமக்கு விரோத மாகச் சொல்லக்கூடாதென்ற எண்ணத்துடன், அப்படிப் பாசாங்கு செய்தாரென்று பின்னல் நடந்த விஷயங் களைக் கொண்டு ஊகிக்கவேண்டியிருக்கிறது. நேற்று நமது வீட்டில் நடந்த விஷயங்களும் என்னைப் பய முறுத்திச் சிறைச்சாலையில் கொண்டுபோய் வைத்துக் கொண்டு என்னிடம் ஓர் வாக்குறுதி பெறுவதற்காகச் செய்தவை என்றும் இப்போது ஊகிக்கிறேன். நேற்று நான் இருந்த காபுராவில் இந்த விஷயங்களை யெல்லாம் ஆய்ந்தோய்ந்து யோசனை செய்யாமல் அவர்கள் யோசனை செய்தபடியே அவர்கள் வல்ையிற் சிக்கிவிட்டேன். நான் ஜன்மமெடுத்து இன்றுவரையில் சொன்ன வாக்கைத் தட்டி நடந்தவன் அல்ல. அப்பேர்ப்பட்டவனென்று தெரிந்ததனுல்தான் என்னைச் சிக்குமுக்கிற் கொண்டு போய்விட்டு, பிடித்த பிடியிலேயே வாக்களிக்கும்படி செய்துவிட்டார்கள். இப்போது யோசித்துப் பார்க்கை யில் அப்படி வாக்குக் கொடுத்த நாக்கை வெட்டிவிட வேண்டுமென்று தோன்றுகிறது. மேலும், நான் விடுதலை அடையும்பொருட்டு என் உயிரிலும் சிறந்த இருவரைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/62&oldid=677428" இலிருந்து மீள்விக்கப்பட்டது