பக்கம்:ராஜாம்பாள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

இராஜாம்பாளும் சாமிநாத சாஸ்திரியும் 57 கொடுத்து வேண்டிய ஏற்பாடு செய்யவேண்டுமென்று சொன்னதன்றி என்னேச் சாப்பிட்டுப் படுத்துக்கொள் ளும்படி பல வகையிலும் வேண்டினர். ஆனல் புத்தி தெரிந்தது முதல் உங்கள் பக்கத்திலேயே உட்கார்ந்து சாப்பிட்டுப் பழக்கப்பட்டவளாகிய எனக்கு நீங்கள் இப்படிப்பட்ட சங்கடத்திற்குள் அகப்பட்டுக்கொண்டி ருக்கிறீர்களென்று தெரிந்தும் எப்படிச் சாப்பிட மனந் துணியும்? ஆகையால்தான் நீங்கள் ராத்திரி திரும்பி வரும்வரையில் நானும் கோபாலனும் உட்கார்ந்து, மேல் நடக்கவேண்டிய விஷயங்களைக் குறித்துப் பேசிக் கொண்டே இருந்தோம். நீங்கள் திரும்பி வந்தவுடனே எனக்கு உண்டான சந்தோஷம் இப்படிப்பட்டதென்று சொல்ல முடியவில்லை. மேலும் அந்த விஷயத்திற்கும் நமக்கும் இனி யாதொரு சம்பந்தமும் இல்லையென்று நீங்கள் சொன்னவுடனே பின்னும் அதிகமான ஆனந் தத்தை அடைந்தேன். ஆளுல் நீங்கள் மாத்திரம் ஒரு விதமான வருத்தத்துடன் யோசனை செய்துகொண்டிருக்கி ஹீர்களென்று எனக்குத் தோன்றுகிறது. நேற்றுப் பட்ட இம்சைக்காகவும் அவமானத்திற்காகவும் உங்களுக்கு வருத்தம் இருக்கவேண்டியது அவசியமாக இருந்தபோதி லும், அதைவிட ஆயிரமடங்கு அதிகமான விசனத்தில் நீங்கள் அமிழ்ந்திருக்கிறீர்களென்று ஊகிக்கிறேன்.

சாமிநாத சாஸ்திரி: கண்மணி, உன்னை நான் வளர்த்த அருமையையும் உன்னுடைய புத்தி நுட்பத்தையும் நினைக்க நினைக்க என் மனமானது அனலிவிடும் மெழுகு போல் உருகுகிறது. நேற்று இருக்கவேண்டிய விசனத்தை விட அதிக விசனத்தில் ஆழ்ந்திருக்கிறேன் என்பதை நீ எப்படி அறிந்தாய்? - -

இராஜாம்பாள். நீங்கள் நேற்று ராத்திரி வந்தவுடனே சாப்பாடு ஒன்றும் வேண்டாமென்று சொல்லிவிட்டுப் படுத்துக் கொண்டீர்களே! அப்போது நான் பாலைக் கொண்டுவந்து கொடுத்து அதையாவது சாப்பிடச் சொன்னபோது உங்களுக்கு என்னைக் கண்டமாத்திரத்தில் உண்டான வருத்தமானது நேற்று நீங்கள் அடைந்த வருத்தத்தால் ஏற்பட்ட விசனம் அல்லவென்றும், வேறு காரணத்தால் ஏற்பட்டதென்றும் தெளிவாய் என் மனத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/61&oldid=677427" இலிருந்து மீள்விக்கப்பட்டது