பக்கம்:ராஜாம்பாள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 இராஜசம்பாள்

சாமிநாத சாஸ்திரியை அடைத்திருந்த இடத்தில் அவனே அடைத்துவிடச் சொல்வி அவனை வேலையிலிருந்து நீக்க வேண்டிய பிரயத்தனங்கள் செய்வதாகவுஞ் சொல்வி விட்டுச் சாமிநாத சாஸ்திரியைச் சப் மாஜிஸ்டிரேட்டார் வண்டியில் ஏற்றிக் கொண்டுபோய் வீட்டில் விட்டுவிட் டார்கள். அப்பால் இன்ஸ்பெக்டர் மறுபடியும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் அடைக்கப்பட்டிருந்த கான்ஸ்டே பிலைத் திறந்துவிட்டு அவன் நெடுநாளாகத் தன்னைச் சொந்த ஊருக்கு மாற்றவேண்டுமென்று கேட்டுக் கொண்டபடி அவனே மாற்றின ஆர்டரும் கையிற். கொடுத்துப் பத்து ருபாயும் கொடுத்துவிட்டுத் தம் வீட் டிற்குப் போனர். அவன் அன்று தான் விழித்த முகம் நல்ல முகமென்றும், அப்படியே நித்தியம் தன்னை அன்று அடித் ததைப் பார்க்கிலும் நான்கு பங்கு அதிகமாய் அடித்துப் பத்து ரூபாய் கொடுத்தால் எவ்வளவு உபகாரமாயிருக்கு மென்றும் எண்ணிக்கொண்டு சந்தோஷமாய்த் தன் ஊர் போய்ச் சேர்ந்தான்:

5. இராஜாம்பாளும் சாமிநாத சாஸ்திரியும்

இராஜாம்பாள்: அப்பா ! நேற்று ராத்திரி ராமண்ணு. வும், போலீஸ் இன் ஸ்பெக்டர் மணவாள நாயுடுவும், போலீஸ் கான்ஸ்டேபில்களும் வந்து பொன்விளைந்த களத் தூரில் திருட்டுப்போன நகை நமது வீட்டில் அகப்பட்ட தாகச் சொல்லி உங்களை இம்சைப்படுத்திப் பிடித்துக் கொண்டு போனபோது எனக்கு வந்த கோபம் இவ்வளவு அவ்வளவென்று சொல்ல முடியாது. அப்போதே நமது வீட்டிலுள்ள ரிவால்வரைக் கொண்டு அவர்களெல்லோரை யும் சுட்டுவிடலாமென்று யோசித்தேன். அப்பால் ஆழ்ந்து யோசனை செய்ததில் இவர்களைச் சுட்டால் இன்னும் அதிகப் போலீஸ் வீரர்கள் வந்து நம்மைப் பிடித்துப் போவார்களென்றும், அதஞல் உபகாரமில்லையென்றும் தீர்மானம் செய்து சும்மா இருந்துவிட்டேன். அப்பால் கோபாலனைக் கூப்பிட்டுக் கேட்டதில் அவர் பொழுது விடிந்த பிற்பாடு சென்னைக்கு வக்கீலுக்குத் தந்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/60&oldid=677426" இலிருந்து மீள்விக்கப்பட்டது