பக்கம்:ராஜாம்பாள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாண ஏற்பாடுகள் 67

லாம் போட்டுக்கொள்ளாமலும், நல்ல புடைவையைக் கட்டிக்கொள்ளாமலும் நாடோடியைப்போல் இருக்கி ருயே! உனக்கு நகைகளெல்லாம் ஜதையாய் உன் தகப்ப ஞர் செய்து போடவில்லையா? அப்படி இல்லாவிட்டால் உடனே பச்சையில் ஒரு ஜதை, சிவப்பில் ஒரு ஜதை, வைரத்தில் ஒரு ஜதை ஆக மூன்று செட்டுகள் அனுப்பச் சொல்விச் சென்னை டாக்கர் ஷாப்புக்கு இப்போதே தந்தி கொடுக்கிறேன்.

இராஜாம்பாள்: வாரியக் கட்டைக்குப் பட்டுக் குஞ் சமா? எனக்கு இப்போது இருக்கும் நகைகளே எதேஷ் டம். நான் கெட்ட கேட்டுக்கு எனக்கு இருக்கும் நகை போதாதோ? தயவுசெய்து தாங்கள் இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் என்னை மன்னிக்கவேண்டும். பதவியில் இந்திர னுக்கும் அழகில் மன்மதனுக்கும் சம்பத்தில் குபேரனுக் கும் ஈகையில் கர்ணனுக்கும் சாமர்த்தியத்தில் அர்ஜு னனுக்கும் பலத்தில் பீமசேனனுக்கும் சத்தியத்தில் அரிச்சந்திரனுக்கும் சமானமாகிய தங்களைப் பர்த்தாவாய் அடைய, பூர்வஜன்மத்தில் நான் எவ்வளவு தவஞ்செய் திருக்கவேண்டும்? நான் ஜன்மம் எடுத்ததற்கு அவ்வளவே எனக்குப் போதுமானது.

நீலமேக சாஸ்திரி: என்னை நையாண்டி செய்கிறாய் போல் இருக்கிறது. ஒர் அடி தூரங்கூடத் தாண்டமுடியாத வனைத் தாண்டவராயப்பிள்ளை என்பதுபோலும், ஒரு கண் குருடாய் இருப்பவனே நல்லகண்ணுப் பிள்ளை என்பது போலும், பிச்சைக்காரரைக் கண்டவுடனே கல்லாலடித் துத் துரத்துபவனைத் தர்மபுத்திரப்பிள்ளை என்பதுபோலும், ஒரு முத்துங் கண்டறியாதவனைச் சொரிமுத்துப் பிள்ளை என்பதுபோலும், மூச்சுக்கு முந்நூறு பொய் சொல்ப வனைப் பொய்சொல்லா மெய்ப்பிள்ளை என்பதுபோலும், நீ சொன்ன அம்சங்களில் கொஞ்சங்கூட இல்லாத என்னை இப்படி யெல்லாஞ் சொல்லுகிருயே!

இராஜாம்பாள். தாங்கள் அப்படித்தான் சொல்லு வீர்கள். என்னைப்போல் வெம்போக்கியை அப்படி யெல்லாஞ் சொன்னல் வாஸ்தவத்தில் நம்மை மெச்சிக் கொள்கிறார்களென்று எண்ணிக்கொள்வார்கள். ஆளுல் தங்களைப்போல் சகல குணங்களும் பொருந்தியவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/71&oldid=684613" இலிருந்து மீள்விக்கப்பட்டது