15
15 முல்லைசூழ் இந்நாட்டுப்படையிலோர்வீரர் குறைந்திட்டால், நல்ல உடையிலோர் இழிசல் வந்தது போலன்றோ? இனித்தடையின் றிநுழைவரேபகைவர் என எண்ணினேன்; அடைபட்ட கண்ணீர், அணை உடைத்ததத்தான் என்றாள். அவன், குகைவிட்டுக் கிளம்பும் ஒருபுலியென. புகைவிட்டுக் குமுறும் எரிமலையென், பகைவெட்டிச் சாய்க்கும் வாளெடுத்தான் ; சூளுரைத்தான்: சுடர்முகம் தூக்கினான் ; சுக்குநூறுதான் சூழ்ந்துவரும் பகை என்றான். நாடு மீட்காமல், வீடு திரும்பேன் என்றான்! நங்கையோ, நகை முழக்கம் செய்து நடந்திடுக கண்ணே என்றாள்! திரும்பி வருவேனோ இல்லையோ எதற்கும் இப்போது ஒரு முத்தம் இந்தா திரும்பு என்றான்1 கொடுத்தான்-பின்தொடுத்தான் பகைவர் மீது பாணம்! போர் ! போர்! போர்! எனவே முழங்கிற்று முரசு ஒலி! பார்! பார் 1 பார்! அந்தப் பைங்கிளியின் உரிமையாளன். பகைவர்மீது பாய்ந்து கொல்லும் வீரம் பார் ! என்று பட்டாளத்துத் தோழரெல்லாம் வியந்துரைத்தார்! அந்தக் கட்டாமணிமுத்தாளும் கண்வழியே சிரித்திட்டாள், களத்தினிலே அத்தானுக்கு அடுக்கடுக்காய் குவிந்துவரும் வெற்றிகளைக் கேட்டுவிட்டு! கோட்டைகள் விடுபட்டன! எதிரியின் குதிரைக் கால்கள் உடைபட்டன! வேழப்படை முறிபட்டது வேல்கள் பொடிபட்டன! எம். கொற்றவன் படைகள் கொட்டும் பேரிகை கோடையிடியெனக் கேட்குது! கேட்குது! எனக் குதித்திட்டாள் -புதுப்பண் அமைந்திட்டாள்! வீரர்கள் வந்தனர்- வெற்றி உன் கணவனுக்கே என்றனர்! வேந்தனின் தூதுவர் வந்தனர்-வாழ்த்துக்கள் வழங்கினர் 1 வீட்டோரத்துத் தோழிகள் வந்தனர்-வெற்றி நீட்டோலை வாசித்து மகிழ்ந்தனர்! அந்த அழகி, ஆனந்தக் கண்ணீர் பொழிந்தாள் -அப்போது,