18
18 புவ: கனக விசயர் இல்லாத காலத்திலே இமயத்திலே படை எடுத்தோமரம்-அவர்கள் ஆளும்போது கால் எடுத்து வைக்கட்டும் பார்ப்போம் என்று கர்ஜிக்கிறார்கள் ! சேர: நமது வாளைப் பழித்தார்கள்! அவர்களைத் தாள் பணிய வைக்கிறேன்! வேண்மாள்... வேலை வந்து விட்டது! வீரத்துக்கு சோதனை வந்து விட்டது! வருகிறேன்! சேரன் சபை [நாடகத்திற்கு தலைமை தாங்கும் சமரசம் உணர்ச்சி வசப் பட்டு எழுந்திருக்கிறார்.) சாந்தம்: என்னங்க... ஒக்காருங்க... நீங்க தலைவரு. (சேரன் செங்குட்டுவனுக்கும் கனக விசயருக்கும் நடை பெற்ற போரில் செங்குட்டுவன் வெற்றி பெறுகிறான்.) சேரன்: வில்லவா! வெற்றி முழங்கும் இந்த இடத்திற்குப் பெயர் என்ன? வில்லவன்: குயிலாலுவம்! சேர: குயிலாலுவம்; குறித்துக் கொள்! இந்தப் பாறை கள் அணைத்தும் பைந்தமிழர் வீரம் தீட்டிய ஏடுகள்! வெற்றி மட்டும் போதாது வில்லவா : அந்த விணர்களை விடக்கூடாது! வில்: காஷாய் உடையிலே ரிஷிகளைப் போல் எங்கோ ஓடி விட்டார்களாம் கனக விஜயர்கள்! சேர: ஹா... ஹா ...! புதுமையல்ல... அவர்களுக்கு உரிய தான ஒரே பழக்கம் அதுதான்! [கனக விஜயர் சாமியார் உடையில் கைது செய்யப்பட்டு கொண்டு வரப்படுகிறார்கள். 5.] கனக விஜயர் : மன்னவா! மண்டியிடுகிறோம். மன்னித்து விடுங்கள்! ? சேரன்: மன்னிப்பதா? நான் மன்னிப்பதா? தமிழ் நாட்டு மண்ணில் வந்துமண்டியிடுங்கள், அது உங்களை மன்னிக்கட்டும் வில் மன்னவா! தமிழகம் திரும்பவேண்டாமா? புறப் பட்டு முப்பத்தி ரெண்டு திங்கள் ஆகின்றனவே!
சேர: புறப்படுவோம் - வில்லவா! அதற்குள் கண்ணகிக் குச் சிலை நாட்ட இங்கு கல் எடுக்க வேண்டுமல்லவா? வில்: ஆமாம்! எருதுகள் சேர: அந்தக் கல்லைச் சுமப்பதற்குச் சரியான கிடைத்து விட்டன! கனக-விஜயா! தமிழரின் வீரத்தின்மீது வீசினாய் ஒரு சொல்-இப்போது தூக்கு கல்! வீரர்கள்; “சேரன் செங்குட்டுவன் வாழ்க!