20
20 சா௩: உங்க நடிப்பு ரொம்பப் பிரமாதம். தமிழ் நாட்டு சரித்திரத்துக்கே புது உயிர் கொடுத்துட்டீங்க. நான் இவ்வளவு எதிர்பார்க்கவே இல்லை. ராஜா: ரொம்ப தேங்க்ஸ். சாந்: எங்க பாபுவைக் காணோம்? ராஜா: அவன் கலைக்ஷன்ஸ் பாக்கறதுக்கு புக்கிங்க்கு போயிருப்பான். சாந்: என்னாங்க--தம்பிக்கு ஒரு பரிசு கொடுக்கலாம்னு- சம: கொடுத்தா போச்சு... (என்று தன் அங்கவஸ்திரத்தை எடுக்க. சாந்தம் மோதிரத் தைக் காட்டுகிறாள்.) உம்.. உம்.. கொடுத்துடு.
சாந்: தம்பி1 இதை நீங்க தயவு செய்து வச்சிக்கணும். உம். நேரமிருந்தா வீட்டுப் பக்கம் வரணும். ராஜா: எனக்கு வீடு தெரியாதுங்களே! சாந்; தம்பியைக் கேட்டா சொல்லுவானே! ராஜா: சரி, நான் விசாரிச்சுகிட்டு வர்ரேன். சார்: அப்ப போவலாங்களா? சம்: சரி! கீதாவின் தாய் தாயம்மாள்; சொல்லாமலே போறீங்களே! சம்; உங்களைப் பத்தியா? தா : உம்! டாட்டர்1 சம்; யாரு நம்ப? நம்பளைப்பத்தி ஒன்னும் ஓகோ! டாக்டரா? அவருரொம்ப நல்லமனுஷன். தா: என் கொழந்தையைப்பத்தி கேட்டேன். சம; ஓ ! டாட்டரா! --இதுவா? ரொம்ப நல்லா அழகா இருக்கு. நல்ல புள்ளே - படிச்சிருக்கா? தா உம்- நடிப்பு? சம நடிச்சுதா? நான் கவனிக்கலே - ஓ பேஷ் பேஷ் பேஷ் - நல்ல நடிப்பு. பேஷ் பேஷ்-பிரமாதம்! பிரமாதம்! (கலெக்ஷன் ரூம்பில் ராணியை கற்பழிக்க முயல்கிறான் பாபு) [வெளியே வந்த ராணி, மயக்க மருந்து கலந்த டீயைக் குடித்திருந்ததால் தெருவில் நின்றிருந்த ராஜாவின் காரில் படுத்துவிடுகிறார். தன் வீடு சென்றதும் ராஜா பார்க்கிறான்.) ராஜா: ஆக1 போம்பளை! நம்ம வண்டீல எப்படி வந் தாங்க? இது என்னடா இது டேஞ்சரா போச்சு! அய்யய்யோ, இந்தாம்மா,யார் அது? இந்தா ஒண்ணைத்தான்( இது. இது, இந்த பொண்ணு எழுந்திரி, கீழே வா வா. கீழே எறங்கு. எறங்கு அட அடடே.. இந்தா. இந்தா, எழுந்திரி இந்தா எழுந்திரிம்மா. எழுந்திரி. யாதி நீ யார் நீ?