40
40 < முனி ஏன் தெரியாது? திலோத்தமையும், மேனகையும். ஊர்வசியும், ரம்பையும் இந்த தேவாதி தேவனின் தேவரடியார் கள் என்பது உனக்குத் தெரியாதா? "தேவரனையர் கயவர் என்ற திருக்குறளும் புரியாதா? தெரிந்தும் பிழை புரிந்தாய். புரிந்தும் பிழை புரிந்தாய். அகல்: இல்லை ஸ்வாமி இல்லை. தங்களைப் போலவே உருமாறி வந்து - கண்ணே. தங்கமே. தனியாத அன்பே, என் றெல்லாம் வர்ணித்தான்... முனி நான் என்றைக்கடி உன்னை அப்படி அழைத்திருக் கிறேன்? அப்போதாவது புரியவேண்டாம என்று ஆள் வேறு அகல் தாங்கள் என்று நினைத்தேன் -- தணவில் வீழ்ந்து விட்டேன். ஆ.... தவறிவிட்டேன். முனி . தவறிவிட்டாய் து தவமுனிவன் பத்தினியே. வேறு மனிதனுக்கும் -வீட்டு மனிதனுக்கும் வித்தியாசம் உணர முடியாத வித்தைக்காரியே. உன் சொத்தைக் காரணத்தை என்னால் நம்பமுடியாது... அதைப்போல் இந்த சூழ்ச்சிக்காரனை யும் நம்பமுடியாது... ஏடா இந்திரா. பிறன் மனைவியின் கற்பை கெடுத்த உன் உடம் பெல்லாம்.. இது... இது வாகப் போகட் டும் அடி. அகல்யா. இந்தா நீயும் பிடி. சாபம்... (என்றதும் ராணி தன் புடவைத் தலைப்பை ஏந்துகிறாள்.) ராஜா போ ராணி இப்படியெல்லாம் கிண்டல் செஞ்சா எனக்கு ஆக்ட் செய்ய வராது- ஆமாம்- ராணி நான் உண்மையைச் சொல்லட்டுமா? எனக்கு என்னமோ இந்த நாடகமே பிடிக்கலே. அகல்யா வேஷம் என்னாலே போட முடியாது... ராஜா அப்ப ஒண்ணு செய்யி முனிவர் வேஷம் அகல்யா வேஷம் நான் போடுறேன்... போடு. ராணி, ஜனங்க கியேட்டர்ல என்னா போடுவாங்க தெரி யும்ல! ராசா: நீ சொல்லித்தான் தெரியனுமோ சரி லீலா. அகல்யா நாடகத்தை இதோட நிறுத்திட்டு வேற புது நாடகம் நட த்துவோம். ராணி. என்ன நாடகம்? ராசா ஹாஸ்ய நாடகம் நாடத்துவோம் 112 படுக்கைப் புரட்சி ஆ! ராசா நாடகம் --நடத்துவோம். கரண்ட்: அப்ப அகல்யா? ராசா. அவதான் கல்லாயிட்டாளே!