39
39 ராணி: சரி. பாடம் பண்ணி வைக்கிறேன்! ராஜா: நாளைக்கு ஒத்திகை வச்சிருக்கு!
(அகல்யா நாடக ஒத்திகை) இந்திரன் கவலைப்படாதே அகல்யா என்னைத் தெரிய வில்லை உனக்கு? நான் தான் சூடப்படாமல் கிடந்த இந்த சுந்திர ரோஜாவைத் தேடி ஒடி வந்த தேவராஜன்! இந்திரன் என் பெயர். அகல்யா: ஆ. இந்திரன். இந்தி: ஆமாம் - அமரர் தலைவன்-ஐராவத முடையோன். அகல்; அக்ரமக்காரன். அடப்பாவி, அழியாத என் கற்பை அழித்து விட்டாயே. அபலைகளின் கற்பை சூறை யாடுவதுதான் அமரர் கோனுக்கு அழகோ? நீ தான் தேவாதி தேவ? தீராதி தீரனோ? அய்யோ: நான் ஏமாந்தேன்.கண் வனைப் போல் வேஷம் போட்டு என்னை ஏமாற்றி விட்டான் இந்தக் காதகன், அட கடவுளே. கற்பரசியை ஏமாற்ற வந்த இந்தக் கபட நாடகதாரியின் வேஷம் உன் கண்களுக்கும் தெரியவில்லையா? . இந்தி: கற்பரசியான உன் கண்ணுக்கே தெரியாதபோது வேறு எவர் கண்ணுக்குத்தான் தெரியும். போனதெல்லாம் போகட்டும்: பூங்கொடியே. இப்படி வா. அகல்: மறுபடியுமா? அட மகாபாதகா, அடுக்குமா இந்த அக்ரமம். முனிவர்: அடுக்காது. ... அடுக்காது!. மிடுக்காகப் பேசும் மின்னல் கொடியே. ஆஸ்ரமத்துப் பெண்ணே. அந்தரலோ கத்து இந்திரனோடு கூடிக் கிடந்தவளே. உங்கள் காதல் வேட் டைக்கும் கயமைச் சேட்டைக்கும் இந்தப் புனிதமான ஆஸ் ரமந்தானா கிடைத்தது... அடே பொல்லாதவர்களே. பொட் டுப் பூச்சிகளே, புன்மைத் தேரைகளே. இந்தி முனி புங்கவரே!... முனி ஆ. 614 வடிவான தங் இந்தி மன்னித்து விடுங்கள். அன்பு களுக்கு ஆத்திரம் வரலாமா?... தாங்களோ சாது... முனி நீ செய்ததோ சூது. இனி எதையும் கேளாது என் அமரர் தலைவனே இது ஆகாது. இந்தப் பாபம் ஈரேழு ஜென்மத்துக்கும் போகாது. பாபிகளே. பாதகரின் ஆவிகளே.... அகல் ஸ்வாமிகளே. முனி என்னா..? அகல் இந்திரன் இவ்வளவு பெரிய மோசக்காரன் என்று எனக்குத் தெரியாது. ..