45
45 (உள்ளே போய் பீரோவில் தேடுகிறார், பொட்டலத்தைக் காணாததால்...) இந்தா! அது வச்சு இருந்தேனே. அது எங்கே? சாந்: அதை ஏன் கேக்குறீங்க? அவதான் வர்லியே... ஓகோ... நீங்களே கொண்டு கொடுத்துடலாம்னு கேக்கிறீங் களா? சம: என்ன. அவ கிவன்னு உளர்ரே? சாந் என்னா உளர்ரேன்? சம : உம்... சாந்: உண்மையைத்தான் சொல்றேன்... மனுஷன் நல்ல புத்தியோட இல்லைங்கறதுக்கு நான் ஆதாரம் காட்டுறேன்! [பொட்டலத்தைத் தேட, அது கிடைக்கவில்லை] (ராணியை ராஜா நாடகத்தில் நடிக்கக்கூடாது என்று பாபு கேட்டுக்கொள்கிறான்) (நாட கம் நடக்கவிடாதபடி பாபு ரௌடிகளை தூண்டு கிறான்) [படுக்கைப் குழப்பம்) புரட்சி நடந்துகொண்டிருக்கும்போது ராஜா: அய்யோ! என்னடா இது கலாட்டா? லீலா.... லீலா...எங்கே ஒடுரே? எங்கே ஓடுரே?... அடே கர ண்ட், என்னடா கலாட்டா இது? ஆக்டர் டிரசையெல்லாம் ஒண்ணு ஒண்ணா கழட்டு! ஒரு ரௌடி: படுக்கைப் புரட்சியா நடத்துறீங்க! (சண்டை நடக்கிறது) லை தரல்கள் : போலீஸ்! போலீஸ்! [ராஜாவும் ராணியும் தப்பி ஓடிப்போய் ஆற்றில் விழுந்து நீந்தி கரைசேருகிறார்கள்.
(நாடகத்தில் கலகம் ஏற்பட சமரசம் அமைதி படுத்த முயல்கிறார்) ராஜா: லீலா...லீலா... என்ன லீலா, பயந்துட்டியா? ராணி: இதெல்லாம்எனக்கு ஒண்ணும்பிடிக்கவே இல்லை! ராஜர்; எது? ராணி: நாடகம் நாடகம் நடத்துனீங்களே அது! ராஜா: ஓகோ! கலாட்டா வந்துடுச்சேன்னு கவலைப்படு றியா? இதெல்லாம் சகஜம் லீலா!