62
62 வேண்டு மென்றால் இதுபோன்ற கலகத் தம்புறாக்களை மீட்டிக் கொண்டிருக்காதே! [... என்று வெளியில் வர. ராணி நிற்கிறாள்.) ராசா: ஓ.ராணி ஏன்ராணி வாட்டமாய் இருக்கிறாய்?உம். ராணி: ஒன்றுமில்லை. ராஜா ம்...ராணி! இன்று உன்னிடம் ஒரு சேதி கேட்கப் போகிறேன் - அதற்கு நீ கோபப்படாமல் பதில் சொல்ல நீ வேண்டும், தெரியுமா? ராணி: கேளுங்கள்! ரர்சா: ம். ஆமாம். அ...ஹ... சரி! இந்தர் இந்த மலரை உன் தலையிலே சூட்டிக்கொள்! ராணி வேண்டாம்! ராஜா ஏன்,பூ என்றால் உனக்குப் பிடிப்பதில்லையா ராணி? உம். நானும் இவ்வளவு நாளாய் பார்க்கிறேன், ஒரு நாள்கூட உன் தலையிலே நீ மலர் சூட்டிக்கொள்வதில்லை. ஏன்? சரி. பூ வேண்டாம்: பொட்டாவது வைத்துக்கொள்!...ம்.. நெற்றி யைக்காட்டு... ஜவ்வாது பொட்டு ரா: வேண்டாம்! எனக்கேன் இந்த அழகெல்லாம்? ராசா: என்ன ராணி... விதவை மாதிரி எல்லாவற்றையும் வேண்டாம் வேண்டாம் என்கிறாய்? ஆங்...? ரா : ஆ! (அழுகிறான்.) ராஜா? கோபமா ராணி?... நான் கேட்டது. ஆ| நான்விளை யாட்டுக்குக்தான் கேட்டேன்... ரா: விளையாட்டுத்தான்! விளையாட்டுப் பருவத்திலேநடை பெற்ற கலியாண விளையாட்டுத்தான்! அந்த விளையாட்டின் விளைவுதான், இதோ, இந்த ராணியின் விதவைக்கோலம்! ராஜா: ஆ. ரா; இனியும் மூடி வைத்துப் பயன் என்ன? மூளியாகி விட்டது என்வாழ்க்கை. முள்வேலி பேர்ட்டு மூலைக்கு அனுப்பி விட்டது இவ்வுலகம். என்னை வட்ட நிலா கட்டிக் கரும்பு என்பீர்களே. உங்கள் ராணி ஒரு பட்ட மரம்!.. பட்ட மரம். பாபு: பட்ட மரம் துளிர்க்காது--கெட்ட பால் சுவைக் காது.ஹ...ஹ...ஹ ராஜா இப்போதாவது பாயுவின் பேச்சில் ஒளிந்து கிடக்கும் பச்சை உண்மை புலப்படுகிறதா? ராஜா; விதவை. என் ராணி விதவை.ராணி, இதை ஏன் இத்தனை நாள் என்னிடம் சொல்லவில்லை? பாபு: இது ஒரு கேள்வியா? ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரைக்கும் ஏமாற்றுகிறவர்களுக்கு லாபந்தானே. இப்போது நீ கண்டு பிடித்துவிட்டாய்... அவளும் கண்ணீர் பாணத்தை பிர யோகிக்கத் தொடங்கிவிட்டாள்.