உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ராஜா ராணி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

6} ராஜா: நீலிக் கண்ணீருக்கு இளகிவிடும் நெஞ்சம் எனக் குக் கிடையாது பாபு. ராணி: அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்! மோவா அரும்பு - தாவாச் சிறுமான்-என்றெல்லாம் அழைக்கப்பட்ட பருவத்திலே என் கழுத்திலே மாங்கல்யக் கயிறு பிணைக்கப் பட்டதாம் -- நான் மாங்கல்யமிழந்த மங்கை என்று எனக்கே இன்றுதான் தெரியும்! ராசா: அப்படியானால். இத்தனை நாள் ஏன் உன் கூந்த லிலே மலர் இல்லை? நெற்றியிலே பொட்டு இல்லை?. உம்... இவ் வளவு பெரிய உண்மையை மறைத்து என் உள்ளத்தைத் திரு டிக்கொண்ட $ வேறு என்னதான் செய்யமாட்டாய்! பாபு: கொலைகூட செய்வாள்! ராணி: அய்யோ! என் பேச்சை நம்புங்கள்.. நான் சொல் வதைக் கேளுங்கள்... (கையைப் பிடிக்கிறான்) ராசா: கேட்டதெல்லாம் போதும், வீடு என்னை... ராணி: தாலி இழந்தவன் என்பதற்காகவா எனக்கு இந் தத் தண்டனை? லீழ்ந்துபோன சமுதாயத்திற்கு விழிப்பூட்டி. விசை ஒடிந்த தேகத்தில் வண்மையூட்டி, நாட்டை மறுமலர்ச்சி சோலையாக்கப் பணிபுரியும் படையிலோர் வீரரா நீங்கள்?விதவை யென்றதும் என் விழி நீரைக்கூட ஏளனம் புரிகிற அளவுக்கு அவ்வளவு கல்லாகவா உங்கள் நெஞ்சம் மாறிவிட்டது? என் னைப் பாருங்கள்... இந்தப் பருவக் கொடி பாழும் விதவைக் கட்டுப்பாடென்னும் சூறாவளியிலே சிக்கிச் சீரழியத்தான் வேண்டுமா? சொல்லுங்கள்... பதில் சொல்லுங்கள்! ராசா: நீ தாவி இழந்தவள் என்பதைப் பற்றிக்கூட நான் கவலைப்படவில்லை. ஆனால் இத்தனை நாள் இந்த விஷயத்தை என்னிடம் மறைத்து என்னை ஏமாற்றி யிருக்கிறாய் பார், அதை யாராலும் மன்னிக்கவே முடியாது.. ரா: நான் மறைக்கவில்லை -- மறைக்கவே இல்லை. என்னி டம்தான் மறைத்துவிட்டார்கள், மகா பாவிகள். ராசா சே சே.. ரா இதைக் கேளுங்கள் - இதைக் கேளுங்கள். - (ராசா போய்விடுகிறான்) (ராணி தனியே வருந்திக்கொண்டிருக்கிறாள்) பாபு: உலகத்தின் எழில் எல்லாம் ஒன்று திரண்ட அழகுப் பதுமை - காதல் பிச்சைக் கேட்டுக் கதறியதுபோது காலால் உதைத்துவிட்டுப் போய்விட்டான் மடையன், கண்ணே ராணி. கலங்காதே. ஈரேழு பதினாலு உலகத்தையும் விலையாகக் கொ டுத்தாலும் ஈடாக முடியாத உனது இளமை - தேவ மாதர்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/64&oldid=1713850" இலிருந்து மீள்விக்கப்பட்டது