உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ராஜா ராணி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

6-1 மேனியிலும் காணமுடிபாத உனது தேஜஸ் -இவையெல்லாம் விதவையென்னும் புயற் காற்றால் வீணாக அழிந்து போவதை நான் அனுமதிக்கமாட்டேன். தவங்கிடந்து பெற்ற தங்க விக்ர கமே. உன் பட்டுப் பரதங்களைத் தொட்டுக் கும்பிட நானிரூக் கிறேன்...நீ இளம் விதவையாக மட்டுமல்ல. இன்றைக்குத் தான் விவாக ரத்து செய்துவிட்டு நீதி மன்றத்திலே இருந்து நேரே இங்கு வருவதாயிருந்தாலும்கூட ஏற்றுக்கொள்ள நான் தயாராயிருக்கிறேன்... ராணி: பாபு/ உளறிக்கொண்டே இருக்காதே, உதைத் தாலும். அணைத்தாலும் இந்த உள்ளம் என் ராசா ஒருவருக்கு மட்டுமே இடமளிக்கும், ராணி ராசாவுக்குத்தான் சொந்தம்- இந்த சொந்தத்தை அவர் மறுத்தால்...ராணி உலக பந்தத்தை யே அறுத்துக்கொள்வாளே தவிற. உன் போன்ற தீப் பந்தங்க ளிலே விழுந்து சாகும் விட்டில் பூச்சியாக மாட்டாள். பாபு: உம், ராசாவே பிறக்காமல் இருந்திருந்தால் என்ன செய்வாய்? ராணி: அப்படியேன் கற்பனை செய்கிறாய்? நானே பிறக் காமல் இருந்திருந்தால் நீ என்ன செய்வாயோ--அதைச் செய், இப்போது. . பாபு: ம், ராணி ராசாவுக்குத்தான் சொந்தம். ராணி ராசா வுக்குத்தாள் சொந்தம். நான் அடிக்கும் துருப்புச் சீட்டிலே அந்த ராசாவே வெட்டுப்பட்டு விட்டால். உம்...! ராணி வீடு (ராசா கதவைத் தட்டுகிறான்) ராசா: ராணி!... ராணி ! ராணி. 1 ஞான: (கதவைத் திறந்து) யாரு?... ராசா: ராணி இல்லே?... ஞான: ராசா: ராணி இல்லே, நீங்க யாரு? நான்தான் ராசா. ஞான: ராசாவா? அடப்பாவி. என் குடும்பத்தைக் கெடுத்த துரோபி. என் மகளோட மனதைக் கலச்சி அவளை பாபாத்மாவாகச் செய்துவிட்டாயே. பாதகா.துரோகி. ராசர்: பெரியவரே, ஆத்திரப்படாதீங்க - என்னுடைய குற்றம் எதுவுமில்லை. ஞான: ஆமாம். குற்றமெல்லாம் என்னுடையதுதான் ஒரு ஏழைக்கு உதவி செய்வதுபோல நடித்து. அப்பாவிட் பெண்ணை ஏமாற்றி, சாஸ்திரோத்தமான சம்பிரதாயத்தையே அழித்துவிட்டாயே. சண்டாளா. கொலைகாரப் பாதகா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/65&oldid=1713851" இலிருந்து மீள்விக்கப்பட்டது