65
65 ராஜா: பெரியவரே! கொஞ்சம் பொறுமையோடு பேசுங் கள். உண்மையைத் தெரிந்துகொள்ளத்தான் நான் இங்கு வந்தேன்! ஞான: உண்மை! என்ன உண்மை? ராணி விதவை! அவள் உனக்கு கிட்டாத பொருள்! இதுதான்.நீ தெரிஞ்சுக்க வேண்டிய உண்மை! போய்விடு! என் முன்னால் நிற்காதே! போய்விடு... போ! [பாபு கீதாவிடம் சாக்ரட்டீஸ் நாடகத்தில் சாக்ரட்டீஸாக நடிக்கும் ராஜாவுக்கு உண்மையான விஷத்தைக் கொடுத்து ராஜாவை கொன்றுவிட திட்டமிடுகிறான்) ராணி வீடு [ராணி விஷம்குடிக்க முடிவு செய்து சமரசத்துக்கு கடிதம் எழுதுகிறாள்.] விதவை என்ற சொல்லைவிட விஷம் என்ற சொல் சுவையாக இருக்கிறது... இந்த வையகத்தில் வாழி முடியாத நிலைபெற்ற பெண்ணொருத்தி, இதுபோன்ற முடிவைத் தேர்ந்தெடுத்ததைத் தாங்கள் குற்ற மெனக் கருதமாட்டீர்கள் என்று நம்புகிறேன்! விடைய பெற்றுக்கொள்கிறேன்... (அப்போது கரண்ட் வருகிறான்.) அன்புள்ள. ராணி. கர: அம்மா ! என்னம்மா இது நாடகத்துக்கு வராம்... ராணி: கரண்ட்! நல்லசமயத்தில் வந்தாய்... இந்தா... இந்த கடிதங்களைக் கொண்டுபோய் ராஜாவிடமும், சமரசத்திடமும் கொடுத்துவிடு கர: [வாங்கிக்கொண்டு ) நீங்க நாடகத்துக்கு வர்லியா? வாங்கம்மா.அருமையா இருக்கு நாடகம்! சாக்ரடீஸ் (நாடகம்) [கிரேக்கத்தின் வீதியிலே ஒரு நாள்.) சாக்ரடீஸ்; "உன்னையே 飛 அறிவாய், உன்னையே அறிவாய்,' கிரேக்கத்தின் கீர்த்தி, புவன மறியாத தல்ல, அதற்காக இங்கே விழுந்திருக்கும் கீறல்களை மறைத்திட முயல்வது புன் ணுக்கு 'புனுகு தடவும் வேலையைப் போன்றது!.. அததல் தான் தோழர்களே. சிந்திக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்ன சிரந் தாழ்த்தி உங்களை அழைக்கிறேன்!