66
66 உன்னையே நீ அறிவாய்! இந்த உபதேசத்தின் உண்மையை உணர்வதற்காக உங்களையெல்லாம் அழைக்கிறேன்! அறிவு... அறிவு! அகிலத்தின் எந்த மூலையிலிருந்தாலும், அதைத் தேடிப் பெறுவதற்காக உங்களை அழைக்கிறேன்! 'உன்னையே நீ அறி வாய் இந்த உபதேசத்தின் உண்மையை உணர்வதற்காகத் தான் என் உயிரினுமினியவர்களே, உங்களையெல்லாம் அழைக் கிறேன்! ஏற்ற மிகு ஏதென்சு நகரத்து எழில்மிக்க வாலிபர்களே 1 நாற்ற மெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமழ்விக்க. இதோ! சாக்ரட்டீஸ் அழைக்கிறேன். ஓடிவாருங்கள்!... ஓடி வாருங்கள்! வீரம் விலை போகாது - விவேகம் துணைக்கு வராவிட்டால்! தீட் டியவாளும், தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது கீரர்களே! இதோ நான் தரும் அறிவாயுதத் தையும் எடுத்துக்கொள்ளுங்கள்! அறிவாயுதம்! அறிவாயுதம்! அகிலத்தின் அணையாத ஜோதி- மெலிடஸ்: அறிவாயுதமாம்! அனைத்துலகும் அடி பணியும் அஸ்திரமாம்! குமுறும் எரிமலை - கொந்தளிக்கும் சுடல் இவை களைவிடப் பயங்கரமானவன் சாக்ரடீஸ் ! .. அவன் தரும் அறி வாயுதம் கிரேக்கத்திலே தயாராகுமானால், நாம் தலை தூக்கவே முடியாது! முடியாது அனிடெஸ் என்ன சொல்கிறீர்...? அனிடஸ்: மெலிடஸ் நாம் கீறிய கோட்டைத் தாண்டாத கிரேக்க மக்களுக்கு அந்தக் கிழவன் அறிவுக் கண் வழங்கு வதற்குள் அவனை நாம் அழித்துவிட வேண்டும் மெலி: ஆம் ! அதுதான் சரி! சாக்ரடீஸ், நீ கைது செய்யப் படுகிறீர்! (உம்.. என்று வீரர்களிடம் உத்திரவிடுகிறார்.)
- நீதி மன்றம்.*
அனி: சாக்ரடீஸ், நாட்டில்நடமாடக்கூடாத ஒரு ஆத்மா! ஜனநாயக அரசாங்கத்தைக் குறைகூறும் அந்த ஐந்து உடல் முழுதும் விஷங்கொண்டது! கேட்டார் பிணிக்கும் சொற்க ளால், கேளாரும் வேட்ப மொழியும் வார்த்தைகளால், கேடு மலியும் கருத்துக்களை அள்ளி வழங்கி அரசாங்கத்துக்கு விரோத மாக, ஆண்டவனுக்கு விரோதமாக, சட்டத்திற்கு விரோதமாக இளைஞர்களைத் தூண்டிவிடும் இழிகுணக் கிழவன்! (சாக்ரடீஸ் சிரிக்கிறான்.) நீதி: என்ன சிரிப்பு என்ன காரணம்? சாக்: ஒன்றுமில்லை தலைவ!...ஆத்திரத்திலே $ அனிடல் தன்னை மறந்து என்னைப் பார்த்துக் கிழவன் என்று கேலி புரி கிறார்! அதை நினைத்தேன் - சிரித்தேன், கடல் நுரைபோல் நரைத்துவிட்ட தலைஎனக்கும் - அனிடசுக்கும்! இல்லையா சபை யோர்களே ! என்ன அனிடஸ். உண்மைதானே?