67
67 மெலி: சாக்ரடீஸ் வழக்கும் விசாரணையும் உங்கள் இரு வரின் தலையைபற்றி யல்ல, அதை ஞாபகப்படுத்த விரும்பு கிறேன்! சாக்: மிகவும் நன்றி மெலிடஸ்! மிகவும் நன்றி! ஆனால் ஒன்று,எண்சாண் உடம்பிற்கு தலையே பிரதானம்போல், இந்த வழக்கிற்கும் தலைதான் பிரதானம்! என் தலையிலே இருந்து சுடர் விட்டுக் கிளம்பும் அறிவு - அதை அழிக்க கவிஞனாகிய உன் தலை யிலே இருந்து புறப்படும் அர்த்தமற்ற கற்பனைகள் - அரசியல் வாதி அனிடசின் தலையிலேயிருந்து பீறிட்டெழும் அதிகார ஆணவம்- இந்த மூன்றுக்குமிடையே நடக்கும் மும் முனைப் போராட்டம்! அதன் விளைவுதான் மெலிடஸ், இந்த வழக்கு! - மெலி: பார்த்திர்களா சட்டத்தையும் சபையையும் அவ மதிக்கிறான்?...இப்படித்தான், இளைஞர்களையெல்லாம் கெடுத் தான்...1 சாக் இளைஞர்களை ஒரு கிழவன் எப்படியப்பா கெடுக்க முடியும்? நானென்ன வாலிபருக்கு வலை வீசும் விலை மாதா? பருவ விருந்தளிக்கும் பாவையா? மெலி: மாதரிடம் இல்லாத மயக்கு மொழி - வாலிபர்க்கு வலை வீசும் வனிதையரும் பெற்றிடாத வசீகரச் சொல் அலங் காரம் - வாரத்தை ஜாலம் - அடுக்குத் தொடா- இப்படிப் பல மாயங்கள் கற்றவர் நீர். - சாக்: மந்திரவாதி என்றுகூடச் சொல்வாய்... அன்புள்ள இளைஞளே! ஏதென்ஸ் நகரத்திலே நான் ஒருவன்தான் இளைஞர் களைக் கெடுக்கிறேன் ... அப்படித்தானே? மெலீ: ஆமாம்! சாக்; நீ கெடுக்கவில்லை? மெலி: இல்லை! சாக் அனிடஸ்? மெலி: இல்லை? சாக்: சிற்பி லைகன்...? மெலி: இல்லை! சாக்: இந்த நீதிபதி...? மெலீ: இல்லை! சாக்: யாருமே இளைஞர்களைக் கெடுக்களில்லை. எல்லோரும் இளைஞர்களுக்கு நன்மையே செய்கிறார்கள், என்னைத் தவிர... அப்படித்தானே? மெலி : ஆமாம்.. ஆமாம்... சாக்; இத்தனை பெரும். ஏன் ஏதன்ஸ் நகரமே இளைஞர்களைத் திருத்தும்போது நான் ஒருவன் அவர்களுடைய பாதையை எப் படியப்பா திருப்பிவிடமுடியும்?