உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ராஜா ராணி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

68 அனி: ஒரு குடம் பாலுக்கு, ஒரு துளி விஷம்! சாக்: ஏன், இப்படியும் சொல்லலாமே, இருண்டவீட்டுக்கு ஒரு விளக்கு! என்ன மெலிடஸ் திகைக்கிறாய்? சபையோர்களே! வாலிபர்கள் என்னைச் சுற்றி வானம்பர்டி களைப்போல் வட்டமிடக் காரணம் என்னுடைய வார்த்தை அலங்காரங்கள் அல்ல வளங் குறையாத கருத்துக்கள் தரங்குறை யாத கொள்கைகள் - இந்தத் தரணிக்குத் தேவையான தங்கம் நிகர் எண்ணங்கள்! அழகு மொழியால், அறங்கார அடுக்கு களால், அரும்பு உள்ளங்களை மயக்குகிறேன் என்கிறார்களே, அவர்களைக் கேட்கிறேன், அந்த மொழி எனக்கு மட்டும் சொந்த மல்லவே! அவர்கள் அதை பேசக்கூடாது என்று நான் தடை போட்டது கிடையதே பேசிப்பார்க்கட்டும் அவர்களும் பாபம் பேசித் தோற்றவர்கள்- பேசித் தோற்றவர்கள்-உம்... நீதி: சாக்ரடீஸ்! பேச்சை நிறுத்தும். விளக்கம் தேவை யில்லை. இந்த நீதி மன்றத்தின் அதிகப்படியான உறுப்பினர் களின் வாக்களிப்பின்படி நீர் விஷம் சாப்பீட்டு மரண தண்ட னைக்கு ஆளாக வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்படுகிறது! சாக். கிரேக்க நாட்டு நீதி மன்றம் பெருமைக்குரிய தீர்ப்பை அதைதுவிட்டுமௌனப்புன்னகை புரிகிறது... நாட்டிலே நீண்ட நாட்களாக சூழ்ந்திருக்கும் இருளை விலக்கத்தான் முயற்சித் தேன் குறுகிய காலத்தில்! எழுபது வயதுக்கு மேல் முதல் முத லாக குற்றவாளிக் கூண்டிலே நிற்கும் இந்தக் கிழவனுக்குத் தந்த பரிசு, சாக்ரடீஸ் தீமை செய்பவன் - விண்ணிலும் மண்ணி லும் என்ன இருக்கிறதென்று தேடிப் பார்க்கும் நாத்தீகன்-- பொய்களை உண்மையாக்கும் புரட்டன்-இப்படி எல்லாம் குற்றச் சாட்டுகள்! மரண தண்டனை! கவலையில்லை; கனவு இல்லாத தூக்கத்தைப் போன்றது மரணம் என்றால் அந்த மரணத்துக்காக நான் ஏன் கவலைப்பட வேண்டும்! மரணத்துக்குப் பிறகு மனிதனுக்கு மறு உலகம் உண்டென்ரும் அந்த உலகத்திலே, எனக்கு முன்னே குடியேறி யிருக்கும் ஹோமர், பிண்டர், போன்ற கவிஞர்களைச் சந்திக்கும் பாக்கியத்தைப் பெற்றவனாவேன். எனக்கு தண்டனையளித்த கண்பர்களே, நீங்கள் எதிர்காலத்துக்கு - பதில் சொல்.பியே தீர வேண்டும்! எதிர்கால இளைஞர்கள் ளான்னப்போல இவ்வளவு அமைதியாக கேள்வி கேட்க மாட்டார்கள் - அவர்களது கேள்வி களிலே அக்கினிப் பொறி கிளம்பும்1 அனல், புனல். புயல், அத் தனையும் வீசும் அவர்களை அமைதி வழியில் கட்டிக் காத்து வரும் நான் போன பிறகு, புறப்படப்போகும் புரட்சி எரிமலை யின் முன்னே கீற்க முடியாமல் சுயநலப் புலிகளே. நீங்களெல் லாம் சுக்கு நூறாகப்போய் விடுவீர்கள் ... சுக்கு நூறாகப்போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/69&oldid=1714557" இலிருந்து மீள்விக்கப்பட்டது