உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ராஜா ராணி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

69 த விடுவீர்கள்...! சரித்திரம் திரும்பும்: அதேபோல் மனிதலுக்கு மறு ஜென்மம் திரும்பு மென்றால், அதே ஜென்மத்திலும் இதே குற்றத்தை செய்தே தீருவேன்! செய்தே திருவேன்! என் சிந்தை அணு ஒவ்வென்றும் தேன் பாய்ச்சும் இந்தக் குற்றத்தை, எங் கும் எப்போதும், எந்த இடத்திலும் செய்து கொண்டே இருப்பேன்...!

  • சிறை *

சாக்ரடீஸ்: அன்புள்ளவளே! பார்த்தாயா? பயனற்ற தத் துவ விசாரணையில் காலத்தைக் கழிக்கிறேன், தர்க்கவாதம் புரிந்து தொல்லைப்படுகிறேன் என்றெல்லாம் கோபித்துக் கொண்டாயே! இப்போது பார்-உன் கணவன் அகிலம் புக ழும் வீரனாய். தேசம் புகழும் தியாகியாய் மாறிவிட்டான்... எக்ஸேந்திபி! நீ பாக்கியசாலி தான்! படைபலம் பணபலம் அத் தனை பலத்தையும் எதிர்த்து நின்று யாருக்கும் பணியாத பெரு மையோடு விழிகளைக் கடைசியாக மூடப்போகும் கர்மவீர னுக்கு நீ மனைவி... குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள் அவர்கள் பெரியவர்களாக மாறி நேரிமை தவறி நடந் தால் - நான் உங்களைத் திருத்த முயன்றதுபோல், நீங்களும் அவர்களைத் திருத்த முயலுங்கள்... நேரமாகிறது. காவலர்கள் கோபிப்பர். கிரீட்டோ! இவர்களை அனுப்பிவை... - {அவள் போனபிறகு] கிரீட்டோ! உனக்குத்தெரியுமல்லவா?...முப்பது நாள்சிறை வாழ்வு இன்றோடு முடிந்து-நீதிமன்றத்தின் உத்திரவுப்படி விஷம் சரப்பிட்டு சாகவேண்டிய நன்னாள் இன்றுதான்... M கிரீட், அருமை நண்பா! மலைகுலைந்தாலும் மனங்குலையாத மாவீரனே! உன் ஒளிவீசும் சுழற்கண்களை - துடிக்கும் அகன்ற புருவங்களை -தொகைதொகையாகப் பகைவரினும் - துவளாது தத்துவ விளக்கம் கொட்டும் உணுர்ச்சிமிக்க உதடுகளை இனி ஒரு சாக்ரடீசின் உருவத்திலே நான் காணப்போகிறேனா? (காவலன் விஷக்கிண்ணத்துதுன் வருகிறான்.) சாக் அழாதே நண்பா! அதோ வந்துவிட்டது அமுதம். சிறைக் காவல், இதை என்ன செய்யவேண்டும்? முறைகளைச் சொல்லு. காவ: பெரியவரே. விஷத்தை முழுவதும் குடிக்கவேண் டும். பிறகு இங்குமங்கும் நடந்துகொண்டே இருக்கவேண்டும். கால்கள் மரத்துப்போகும் வரையிலே அப்படி நடக்க வேண் டும் - பிறகு உட்காரலாம் -- கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு ஜீல்லிட்டுக்கொண்டே வரும்-பிறகு படுத்துவிட்டால்-- 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/70&oldid=1714558" இலிருந்து மீள்விக்கப்பட்டது