உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ராஜா ராணி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

70 சாக்: ஆனந் னந்தமான நித்திரை- கனவு மங்கையாலும் கலைக்க முடியாத நித்திரை. சிறைக்காவல, கொடு இப்படி... (விஷக் கிண்ணத்தை வாங்குகிறான்.) கிரி: நண்பா. சிறிதுநேரம் பொறுத்துக்கூட சாப்பிடலாம் ... சிறைச்சாலையிலே அதற்கு அனுமதி உண்டு. ஆசை. சாக். கிரீட்டோ. உனக்கு மிகமிக அற்ப விஷத்தை இன்னும் இரண்டு நாழிகை கழித்து சாப்பிடுவதாக வைத்துக்கொள்; அதற்குள் திடீர் என்று இருதயம் வெடித்து நாள் இறந்துவிட்டால் கிரேக்கநாட்டு நீதிமன்றத்தின் தண்ட னையை எப்படி. நிறைவேற்றுவது? புதிய சாக்ரடீசா பிறந்து வருவான்...? கிரீட்டோ, இந்த விஷம் அழிக்கப்போவது என்னை பல்ல என் உடலை... கிரீ: ஏதன்சின் எழுச்சிமிக்க சிங்கமே. எங்கள் தங்கமே. கிரேக்கப் பெரியாரே. எம்மையும் உம்மையும் இந்த விஷம் பிரிக்கப்போகிறதா? அய்யகோ. நினைக்கவே நெஞ்சு நடுங்கு கிறதே.. நண்பா. கடைசியாக எனக்கு ஏதாவது சொல்லு... ... சாக்: புதிதாக என்ன சொல்லப் போகிறேன். உன்னையே நீ அறிந்துகொள். எதையும், ஏன், எப்படி எதற்காக என்று கேள்--அப்படிக் கேட்டதால்தான் சிலை வடிக்கும் இந்தசிற்பி சிந்தனைச் சிற்பியாக மாறினான். அவர் சொன்னார்--இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம்... எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப் பார்ப்பாய். இதைத்தான் உனக்கும், இந்த உலகத்துக்கும் சொல்ல விரும்புகிறேன்... கிரீட்: சாக்ரடீஸ். உனது பிணத்தை எப்படி அடக்கம் செய்ய வேண்டும்?... சர்க்: புதைப்பதாயிருந்தால் இந்தநாட்டில் உலவும்புழுகு மூட்டைகளையும் என்னோடு போட்டுப் புதைத்து மண்ணாக்கி விடு. எரிப்பதாயிருந்தால் ஏமாற்றுக்காரர்களின் சுவடிகளையும் என்னோடு சேர்த்து சுட்டுச் சாம்பலாக்கித் தண்ணீரில் கரைத்து விடு. விடைகொடு, விஷம் அழைக்கிறது. என் தேசத்துப் பெருமக்களிடம் விடைபெற்றுக்கொள்ளப்போகிறேன்... எனதருமை ஏதன்சு நகரத்துப் பெருமக்களே……… இதோ, சாக்ரடீஸ் சந்தோஷமாக சாகப்போகிறான். இரேக்க நாட்டு நீதிமன்றம் கூடைக் கணக்கிலே அவன் மீது குற்றங்களைக் கெர்ட்டி, கோப்பை நிறைய நஞ்சையும் கொடுத்து,பருகடா இந்த உயிர் பருகும் பாயசத்தை என்று கட்டளையிட்டிருக்கிறது--விஷக் கின்றுத்கின் விளிம்பிலே உபதேசங்களை உதிர்த்த இந்த சாக்ரடீசின் உதடுகள் பதியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/71&oldid=1714559" இலிருந்து மீள்விக்கப்பட்டது