உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ராஜா ராணி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

71 போகின்றன... இன்னும் ஓரிரு வினாடிகள். அதன் பிறகு சாக்ர டீஸ் என்று அழைக்கப்படும் இந்த உடல், உயிர், எல்லாமே அதனதன் தொடர்பை அறுத்துக்கொண்டு வாழ்க்கைத் தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். வருகிறேன் கிரேக்கமே. வருகிறேன்... எனதருமை ஏதென்சுநகரமே. வருகிறேன். நான் ஆடியோடி ஆவேசமாகப் பேசுவதற்குந் துணைபுரிந்த ஏதென்சுநகரத்து எழில்வீதிகளே. வீதியோரத்து மர நிழல்களே! வீட்டோரத்துத் திண்ணைகளே! உங்கள் அனைவரிடமிருந்தும் இந்த கிழவன் விடை பெறும் றான்! பீடு நடையும் பெருமித நோக்கமும் கொண்ட இளைஞர் களே.நாடு காக்கும் நல்ல தம்பிகளே. பேரன்பு கொண்டோரே பெரியோரே. என் பெற்ற தாய்மாரே. நல் இளஞ் சிங்கங்காள். உங்கள் அனைவர்க்கும் சாக்ரடீசின் இறுதி வணக்கம் உரியதா குக... இந்தக் கிழவன் கிரேக்க இளைஞர்களைக் கெடுத்ததாக யாராவது உண்மையாக, உளமாற னைத்தால் அவர்கள் என்னை மன்னிக்கட்டும். மன்னிக்கட்டும். வருகிறேன், வணக்கம்.ஏ ஜெகமே. சிந்திக்கத் தவறாதே. உன்னையே நீ எண்ணிப்பார். உன்னையே நீ எண்ணிப்பார்.. (விஷம் குடிக்கப்போக, நாடகத்தில் உணர்ச்சி வசப்பட்ட சமரசம் எழுந்து, மேடைக்கு ஓடிவருகிறார்.) சம. வேண்டாம்... இம்.. வேண்டாம். சாக்ரடீஸ் விஷம் குடிக்கக்கூடாது. சாக்ரடீசு குற்றமற்ற மனுஷன்... இங் ஆ. வேண்டாம். வேண்டாம். சாக்ரடீஸ் அய்யோ. வேண்டாம்.நீங்க சாகக்கூடாது. கல்விக் களஞ்சியம் சாகற தாவது. எதுக்காக சாக்ரடீஸ் சாதனும் என்ன குற்றம் செஞ்சார்? சிந்திக்கச் சொன்னார். என். எதுக்குன்னு அது குற்றமா? சிந்திக்கிறது குற்றம்னா, மனிதணுக்கு மூளை இருக் கிறதே குற்றமாச்சே...சாக விடமாட்டோன்... இந்த இரேக்க நாட்டு ரீதி மன்றம் செய்யத் தவறின ஒரு காரியத்தை நான் செய்யறேன்... சாகவிட மாட்டேன். இந்தப் பெரியாரை இழந்துட்டா அப்புறம் ஆயிரம் வருளும் தேடினாலும் இந்த மாதிரி அறிவு நமக்குகிடைக்குமா...? அய்யோ. இந்த விஷத்தை குடிக்க வேண்டியது இந்த வாயா" இதை குடிக்கிறதுக்கு வாய் இருக்கு.. இருக்கு. நன் காட்டுறேன் உங்களுக்கு.. அந்த வாய்தான் இதைக் குடிக்கணும்... மெலீடஸ்... மெலிடஸ், (மெலீடஸ், உருவ பாபு திகைக்கிறான்) ஏ. மெலிடஸ், வா இங்கே. குடி - உம்- இந்தா... சண் டாளா. சாப்பிடு. பாபு: அத்தான்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/72&oldid=1714560" இலிருந்து மீள்விக்கப்பட்டது