உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ராஜா ராணி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74 ['ராணி' என்று முட்டி மோதிக்கொண்டு உள்ளே போகி றார்.) ஞான: ராணி.. ...ராணி. எங்க என் ராணி...? சம: பெரியவரே! இனி உம்ம கதறல்... அந்த பொண்ணு காதிலே விழவே விழாது... ஞான: அய்யோ! இப்படி யெல்லாம் வரும்னு தெரிஞ்சா உன் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பேனே அம்மா. சம: இப்பு சொல்லி என்ன பிரயோசனம்...? ஒண்ணும் பிரயோசனமில்லை...ம்., ஒப்பாரி வச்சு அழுவுறதுக்காகவே கொல்றது... உலகத்துக்கே இருக்கிறவங்களைக் உயிரோடு பழக்கமாப் போச்சே! (ராஜா வருகிறான், வேகமாக.] ] ராஜா: ராணி...ராணி... அய்யா! ராணி எங்கே...? ராணி.. ராணி... சம: பதறாதே ராஜா... காரியம் எல்லாம் தீந்தது...உன் காதல் கைகூட முடியாத கனவாகவேப் பேச்சு!... ராஜா; அய்யா? என்ன சொல்றீங்க? பெரியவரே, என் ராணி எங்கே? சம : பெரியவரும் நீயும் சேர்ந்துதான்...ஒரு பெண்ணைப் பிணமாகவே ஆக்கிட்டீங்களே! சாவிலும், வாழ்விலும் பிரிய மாட்டோம்னு சத்தியம்செய்யுறது; சபதம் போடுறது; கடைசி யிலே. கன்னிப் பெண்களை... இப்படி விஷம் சாப்பிட்டு சாக வைக்கிறது - காதல் ஒங்களுக்கு ஒரு கண்ணா மூச்சி விளையாட் டாப் போச்சு.. ம்... போ.. போய் பாரு உன் காதலியை! போ! ...LT (கதவை உடைத்து உள்ளே போகிறான். ராணி கீழே விழுந்து கிடக்கிறாள்.] ராணி...ராணி... ராணி எங்கிருந்தோ வந்தாய், என் இருதயச் சோலை யிலே கானம் பாடும் வானம்பாடியாய்: களிப்பிலாடும் அழகு மயிலாய்; துள்ளும் மானுாய்: கொஞ்சும் கிளியாய்... பறந்தாய்... திரிந்தாய்... என்னைப் பரவசமடையச் செய்தாய்... கடைசியில் என்னை அழைக்காமலேயே, உன் பயணத்தைத் தொடங்கி விட்டாய்!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/75&oldid=1714563" இலிருந்து மீள்விக்கப்பட்டது