75
75 பழத் தமிழ் பேசும் பதுமையே; சுவைக் கனியே சுந்திர நிலவே! காதற் கவிபாடி என் கனவிலெல்லாம் சதிராடும் கண் ணழகி! கடைசியாக நீ என்ன நினைத்து உயிர்விட்டாய்? என்னை நினைத்தா?... இந்தப் பாவியின் இரக்கமற்ற பேச்சை நினைத்தா? ... என் கோகிலமே! குற்றமற்ற உன்மீது சீறி விழுத்த எனக்கு இப்படியா நீ தண்டனை தரவேண்டும்...? இந்த மனிதத்தன்மை யற்றவனை மன்னிக்கும் பெருந்தன்மை, என் மரகதமே! உன் னோடு பிறக்காமலா போய்விட்டது...? பிறக்காமலா போய் விட்டது? அய்யோ! இந்தக் கொடுமைகளைப் பார்க்காமல், நாடக மேடையிலேயே என் கண்ணை மூடியிருப்பேன். அதை யும் நீங்கள் தான் கெடுத்து விட்டீர்கள்.. அதையும் நீங்கள் தான் கெடுத்துவிட்டீர்கள்... அய்யா! பெரியவரே!...ராணி கல்யாணமாகாதவள்! மழ லைப் பருவத்திலே நீங்கள் நட த்தியது கல்யாணமல்ல: மரப் பொம்மை விளையாட்டு! ராணி என் மனைவி... என் வாழ்க்கைத் துணைவியென்று நான் வாயார --மனமாரச் சொல்லி அழுவதற்கு அனுமதி தாருங்கள்... அனுமதி தாருங்கள்... மறுமணத்திற்குச் சம்மதித் தீர்கள் என்பதற்கு அறிகுறியாக அவள் பிணத்துக்கு நர்ன் மாலையிட உத்திரவு கொடுங்கள்... உத்திரவு கொடுங்கள்.. ஏன் பேசாமல் இருக்கிறீர் பெரியவரே - ஏன் பேசாமல் இருக் கிறீர்...? - ராணி . ராணி உன் அழகு விழிகளைத் திறந்து என்னை ஒரு முறை பார் ராணி! நான் உன் கழுத்திலே மாலையிட்டு உன்னை மனைவி என்று அழைக்கப் போவதை ஒருமுறை பார்த்துவிட்டு அமுது கசியும் உன் இதழ் திறந்து 'அத்தான்' என்று என்னை ஒருமுறை அழைத்துவிட்டு, பிறகு செத்துவிடு ராணிராணி! (ராஜா திடுக்கிட்டு திரும்புகிறான்.) சமரசம் குரல்: பக்தா, பயப்படாதே! எழுந்திரு! ராணி உன் இஷ்டம்போல் சிறிது நேரம் உயிரோடிருந்து விட்டு பிறகு இறந்துபோக வரம் தந்தோம்... ராஜா: நீங்க என்ன புரியலியே? சமரசம்: ராணி எழுந்திரு. சொல்றீங்க? எனக்கொன்னும்