பக்கம்:ராதை சிரித்தாள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

8 ராதை சிரித்தாள்

யோகிக்கிற சோப்பையே எனக்கு வச்சிட்டா போலிருக்கு ஹும்' என்று அதை ஒதுக்கி வைத்துவிட்டான்.

   தான் இங்கு வந்தது சரியில்லை என்றுதான் படுது.நாலு வருஷமாச்சுதான் என்றாலும் அவள் மாறலே,மறக்கவில்லை அதைன்னு நல்லாத் தெரியுது என்று நினைத்தான் சிவராமன்.
  அவன் மறுபடியும் முன் அறையில் ஈஸிச் சேரில் சாய்ந்திருந்தபோது அவள் வந்தாள்."என்ன நீங்க சோப்பு போட்டுக்கிடவேயில்லை போலிருக்கே?என்று விசாரித்தாள்.
   "ஆமா, நான் சோப்பு உபயோக்கிறதேயில்லை" என்றான் அவன்.
  "ஓ, சரிதான்!" என்று அவள் சொன்ன குரலில் எவ்வளவோ அர்த்தமிருந்தது.அவள் இதழ்களில் தனி நகை தவள அவனைப் பார்த்துவிட்டு உள்ளே போனாள்.அந்தச் சிரிப்பு அவனுக்கு பழைய நினைவுகளையே திரும்ப இழுத்தது.

  நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்ததுதான் எனினும் அதை அவன் என்றுமே மறந்துவிடமாட்டான்.அவன் வாழ்க்கையிலேயே முக்கியமான சம்பவங்களில் அதுவும் ஒன்று.அதன் நினைவு அடிக்கடி அவன் மனதை உறுத்தும்.அதனால்தான் அவன் ராதையைப் பார்க்க வருவதற்குக் கூடத் தயங்கினான்.
   ராதைக்கு அப்போது கல்யாணமாகவில்லை. 'பெண்ணுக்கு வயது வருதா,போகுதா!உடனோ டொத்த பெண்களுக்கெல்லாம் கல்யாணமாகி,பிள்ளையும் குட்டியுமாக காட்சிதருது.ஆனா ராதாவுக்கு என்னமோ இன்னும் வேலை வரலே. அவ அப்பா அதைப்பற்றி கவலைப் படுவதாகவே தெரியலே'என்று அவள் தாய் அடிக்கடி புலம்பிக் கொண்டிருப்பாள்.