பக்கம்:ரூபாவதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மு. க வு ைர்

இங்ஙனம் அவர்கள் சென்று சோழன், வழுகி, முதலாயினரோ, டெல்லாம் உடன்படிக்கையின் கிபந்தனைகளைக் குறித்துப் பேசி முடித்தபின், வழுதியும் வருமனும் தங்களுக்கு நேரிட்ட மக்களிழவென்னும் தெளர்ப்பாக் கியத்தினப் பற்றி இாங்கிக் கொண்டிருக்கும் பொழுது, இதுகாறும் மாறு வேடம் பூண்டு சுந்தான் சுரூபன் என்று மாறுபெயருங் கொண்டிருந்த சுக் தசாநந்தனும் ரூபாவதியும் தத்தமது மாறுவேடம் நீத்து உண்மை புருவத் தொடு வெளிப்பட்டு முறையே வழுதியையும் வருமனையும் வணங்கி கின்ருர் கள் உடனே ஆண்டுக் குழிஇ யிருந்தோர்களெல்லாம் இக்காட்சியினைக் கண்டு பேரானந்தமுற்று எம் ஆலவாய்ப் பெருமானது அருளே வியந்து துதித்தனர்! அப்பொழுதே யாவரும் நண்பராயினர். வருமனும் தனது காணுமற்போன மகளே மீட்டும் பெற்றமையாற் கழிபேருவகைபூத்து அவ்விருவாது மணவினே. முடித்தற்குரிய முயற்சிகள் செய்யத் தொடங்கினன். இதனுடன் நாடகம் முடிகின்றது. -

முற்பதிப்பிற் போலாது இப்பதிப்பிற் பாத்திரங்களின் இயல்புகட் கேற்ற சொல்வழக்கும் நடைவேறுபாடும் சிற்சில திருத்தங்களும் புதிய செய் யுட்களும் அமைக்கப்பட்டடுளவாமாறு யாவருங் கண்டுபோற்றுதற்குரியது. சிற்சில செய்யுட்களிற் பாடபேதங்களுஞ் செய்திருக்கின்றனம். பலவகையி உம் இக்காடகம் எமது நாடகவியலோடு ஒத்தியங்குமாறு காண்க.

- இந்த நாடகமானது மன்மத வருடம் ஆடி மாதம் முப்பத்திரண்டார் தேதி வியழாக்கிழமையன்றிரவு, சென்னை வித்தியாபிமான சங்கத்தார் மூல மாய் அரங்கேற்றப்பட்டது. இதன் கட் குற்றங் குறைகள் இருக்குமாயிற் பேரறிவுடையோர் பிரியத்தோடும் அவையிற்றினத் திருத்தி எம்மீது கிருபை

புரிவாாாக.

வி. கோ. கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/13&oldid=656951" இலிருந்து மீள்விக்கப்பட்டது